தேவனே தமது வார்த்தையின் வியாக்கியானி GOD IS HIS OWN INTERPRETER பெப்ரவரி 5, 1964 பேக்கர்ஸ் ஃபீல்ட், கலிபோர்னியா, அமெரிக்கா 1. எங்கள் பரலோகப் பிதாவே, உம்மிடமிருந்து வரும் ஒரு வார்த்தை, மனிதர் அனைவரும் எந்த சமயத்திலும் செய்வதையும் கூறுவதையும் காட்டிலும், எங்களுக்கு அதிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். ஜனங்கள் உம்மைக் காண காத்திருக்கிறார்கள். நாங்கள் உமக்கு நன்றி உள்ளவர்களாய் இருக்கிறோம், ஏனெனில் ஜனங்கள் அதிக எதிர் பார்த்தலுடன், ஏதாவது ஒன்று நிகழ எதிர் நோக்கி இருக்கின்றனர். ஜனங்கள் அவ்விதம் ஏதாவது ஓன்றைக் குறித்து தாகமாயிருக்கும் போது, ஆழம் ஆழத்தை நோக்கிக் கூப்பிடும் போது, அதற்கு பதிலளிக்க ஒரு ஆழம் எங்காவது இருக்க வேண்டியது அவசியமாய் உள்ளது அதற்காகத் தான் நாங்கள் இன்றிரவு இங்கு கூடி வந்து இருக்கிறோம்..ஏனெனில் எங்களை ஒன்று கூட்டி, உம்மிடம் உதவியையும் ஆசீர்வாதங்களையும் கோர வேண்டுமெனும் எண்ணம் இந்த போதகர்களின் இருதயங்களிலும் மக்களின் இருதயங்களிலும் குடி கொண்டது நீர் பிணியாளிகளைச் சுகப்படுத்தி, இழந்தவர்களை இரட்சித்து, உம்முடைய வார்த்தையை வெளிப்படுத்துவீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். 2. பரலோகப் பிதாவே, இரவு பின் இரவாக தாழ்மையுடன் உமது சமுகத்தில் காத்திருக்கும் எங்களுக்கு இதை அருள வேண்டுமென்று ஜெபிக்கிறோம். பரிசுத்த ஆவி மகத்தான விதத்தில் ஊற்றப்பட்டு, இங்குள்ள ஒவ்வொருவரும் தேவனைத் தவிர. தங்களைச் சுற்றிலுமுள்ள மற்றெல்லாவற்றிற்கும் குருடாயிருக்கட்டும். ஜனங்கள் மிகுந்த தாகம் கொண்டு, அவர்கள் மத்தியில் ஒரு பெரிய கூக்குரல் எழும்பி, நாடு முழுவதிலும் ஒரு மகத்தான எழுப்புதல் உண்டாகட்டும். ஒவ்வொரு சபையும் ஜனக் கூட்டத்தினால் நிரம்பி, பாவிகள் இரக்கத்திற்காக கெஞ்சி, பரிசுத்த ஆவியானவர் தாமே பிணியாளிகளைச் சுகப்படுத்தி, முடவரை நடக்கச் செய்து, மரித்தோரை உயிரோடெழுப்பி, வார்த்தையில் அவர் வாக்குத்தத்தம் செய்துள்ள அனைத்தையும் அருளுவாராக! 3. கர்த்தராகிய இயேசுவே, எங்களிடம் இன்றிரவு வந்து, உமது வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவீராக! நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரென்றும், உமது வாக்குத்தத்தங்கள் தவறுவதில்லை என்றும் நாங்கள் விசுவாசிக்கிறோம். வானமும் பூமியும் இவ்விரண்டும் ஒழிந்துபோம், ஆனால் உம்முடைய வார்த்தையோ ஒரு போதும் ஒழிந்து போவதில்லை. எங்கள் புரிந்து கொள்ளும் தன்மை திறக்கப்படுவதாக! பரிசுத்த ஆவியானவர் தாமே தரிசு நிலத்தில் விழுவாராக! இன்றிரவு, தேவனுடைய வல்லமைக்கும் ஆவிக்கும் எங்கள் புரிந்து கொள்ளும் தன்மை திறக்கப்பட்டு, எங்கள் மூலமாய் அவர், வாக்குத் தத்தம் பண்ணப்பட்ட தமது வார்த்தைகளை வெளிப்படுத்துவாராக! இயேசுவின் நாமத்தில் கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 4. இன்றிரவு, பொருளை கவனித்துக் கொண்டிருப்பவர்கள், நாம் இப்பொழுது 2 பேதுருவுக்கு வேதாகமத்தைத் திருப்பி, வேத வாக்கியங்களின் பேரில் சற்று நேரம் பேசுவதற்காக, 15-ம் வசனம் தொடங்கி படிப்போம். மேலும், நான் சென்று போன பின்பு இவைகளை நீங்கள் எப்பொழுதும் நினைத்துக்கொள்ள ஏதுவுண்டாயிருக்கும்படி பிரயத்- தனம் பண்ணுவேன். நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர் களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர் களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம். 5 "கண்ணாரக் கண்டவர்கள்'. அதை நான் விரும்புகிறேன் ஏதோ கட்டுக் கதையல்ல, 'நாங்கள் அறிவிப்பதைக் கண்ணாரக் கண்டோம்''. இவர் என்னுடைய நேசகுமாரன், இவரிடத்தில் பிரியமாய் இருக்கிறேன் என்று சொல்லுகிற சத்தம் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய தேவனால் அவர் கனத்தையும் மகிமையையும் பெற்ற போது, அவரோடே கூட நாங்கள் பரிசுத்த பருவதத்தில் இருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்த சத்தத்தைக் கேட்டோம். அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு. பொழுது விடிந்து விடி வெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்கு மளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப் போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும். வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுய தோற்றமான பொருளை உடையதாய் இராதென்று நீங்கள் முந்தி அறிய வேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒரு காலத்திலும் மனுஷருடைய சித்தத் தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்'' 2 பேதுரு 1; 15-21. 6 தேவன் தாமே தம்முடைய ஆசீர்வாதத்தை இந்த வேத வாசிப்போடு கூட்டுவராக! நான் பேச எடுத்துக் கொண்ட பொருள், "தேவனே தமது வார்த்தையின் வியாக்கியானி'' என்பதாகும். 7. நாம் ஒரு குழப்பமான காலத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஆண்களும், பெண்களும் தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று அறியாதவர்களாக காணப்படுவதை காண்கிறோம். எல்லாக் காரியங்களும் ஒரு கொந்தளிப்பாய் காணப்படுகின்றன. எல்லா காரியங்களிலும் அவைகளைப் பார்ப்பதற்கு அநேக வழிகள் உண்டாயிருப்பது போல் காணப்பட்டாலும். அது சாத்தான். அவனே இவைகளை செய்கிறவனாயிருக்கிறான். 8. தேவன் தம்முடைய பிரமாணத்தின் அளவின்படியே அன்றி ஜனங்களை நீதியாகவும், நேர்மையாகவும் நீயாயம் தீர்க்க முடியாது. தேவன் எல்லா மனிதர்களையும் இயேசுகிறிஸ்துவைக் கொண்டு நியாயந்தீர்ப்பார் என்று வேதம் கூறுகின்றது. ஏனெனில் இயேசுகிறிஸ்து தாமே அந்த வார்த்தையாய் இருக்கின்றார். யோவான் முதலாம் அதிகாரம் இவ்விதம் கூறுகின்றது. ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவன் இடத்திலிருந்தது. அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார். (யோ 1:1, 14) . 9. இன்று ஜீவித்துக் கொண்டிருக்கும் நாமெல்லாரும் தேவனின் தன்மைகளின் கிரியைகளாயிருக்கிறோம். முதலாவது அவர் தேவனாக இருக்கவில்லை. அவரை நித்தியமானவர் என்று அழைக்கலாம். தேவன் என்ற பதம் (ஆங்கில சொல் "GOD'') தொழுகைக்குரிய பொருள்'' என்று பொருள்படும், அவர் தேவனாக காணப்படவில்லை. ஏனென்றால் தொழுகைக்குரிய அம்சங்கள் அவரிடம் காணப்படவில்லை. ஆகவே அவர் ஒரு நித்தியமானவராயும், எல்லா ஞானத்திற்கும் மூல ஊற்றாயும் இருந்தார். இந்த எல்லா ஞானத்திற்கும் காரணமாகிய ஊற்றிலே, ஒரு அணுவோ, வெளிச்சமோ, சந்திரனோ, நட்சத்திரமோ, ஒன்றும் காணப்படவில்லை. நாம் தேவன் என்று அறிந்தது எல்லாம் ஒரு பிரமாண்டமான நித்திய ஆவியே (தொடக்கமும், முடிவும் இல்லாதவர்) .அவர் அங்கு அசைவாடிக் கொண்டு இருந்தார். தாம் தேவனாகவும், பிதாவாகவும், குமாரனாகவும், இரட்சகராகவும், சுகமாக்குகிறவராகவும் இது போன்ற அநேகம் தன்மைகளை தன்னகத்தே கொண்டவராக இருந்தார். இவ்விதமாக எல்லா தன்மைகளும் அவருக்குள் இருந்தது. மேலும், இது வரை வெளிப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் அவரின் தன்மைகளே அன்றி வேறல்ல. 10. தேவனின் தன்மைகள் என்பது அவரின் சிந்தனைகளே! வார்த்தை என்பது எண்ணங்களின் பிரதிபலிப்பேயாகும் என்பதை சுட்டி காட்ட விரும்புகிறேன். தேவன் "உண்டாகக்கடவது'' என்று சொன்னவுடன் அது அப்படியே ஆயிற்று. (ஆதி. 1:3) 11 கிறிஸ்தவர்களாகிய நீங்கள் உலகத்திற்கு முன்னே அவரின் சிந்தனையில் இருந்தீர்கள் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். அவரின் சிந்தனையின் செய்கையால் உலகத் தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் காணப்பட்டீர்கள். ஆகவே தான் நாம் அவருடைய பிரஜைகளாக ஆக்கப்பட்டிருக்கிறோம். தேவனே எல்லாவற்றிற்கும் எல்லாமாக இருக்கிறார். தம்மை ஒரு உருவகப்படுத்தி, ஸ்பரிசிக்கத்தக்கதாகவும்; பார்க்கத்தக்க தாகவும்; பழக்கப்படுத்திக் கொள்ளத்தக்கதாகவும் தன்னை ஏற்படுத்திக் கொண்டார். இது தான் தேவன் என்பது-! 12 ஜனங்கள் வியாக்கியானம் பண்ணுதல்' என்பதை குறித்து பேசுகின்றார்கள். சில காலத்திற்கு முன்பு ஒரு கட்டத்திலே நான் பேசிக் கொண்டிருந்தபோது ஒரு மனிதன் என்னை நோக்கி 'பிரான்ஹாமே! நீங்கள் தேவ வார்த்தைக்கு தவறான வியாக்கியானம் தருகிறீர்கள்'' என்று கூறினார். 13. மெத்தோடிஸ்டுகள் (METHODIST CHURCH) பாப்திஸ்டுகள் (BAPTIST) சரியாக வேத வியாக்கியானம் செய்யவில்லையென்றும், பாப்திஸ்துகள் பெந்தேகோஸ்தே-யினரையும், (PENTECOST CHURCH) பெந்தேகோஸ்தேயினர் ஒருத்துவக்காரரையும், (ONENESS CHURCH) ஒருத்துவக்காரர் தேவக் கூட்டுச் சபைகளையும் (ASSEMBLIES OF GOD) இவ்விதமாக, ஒருவர் அடுத்தவரை அவர்கள் வியாக்கியானப்படுத்தும் முறையை குற்றப்படுத்தித் தான் கூறுவார்கள். 14. தேவனே தமது வார்த்தையின் வியாக்கியானியாயிருக்கிறார், தம்மை வியாக்கியானப்படுத்த அவருக்கு வேறொருவரும் தேவையில்லை. தேவனுக்கு என்று வியாக்கியானியாய் இருப்பவன் யார்? யாரும் இருக்க இயலாது. 15. தேவன் ஆதியிலே வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்றார். (ஆதி 1:3) அது அப்படியே ஆயிற்று. அது தான் அவ்வார்த்தையின் வியாக்கியானம். தேவன் ஒரு காரியத்தை கூறும் பொழுது அது அங்கு செய்கையில் காணப்படுவதே தேவனின் வியாக்கியானமாயிருக்கிறது. வெளிச்சம் உண்டாகக் கடவது'' என்று அவர் கூறின பொழுது வெளிச்சம் உண்டாவதற்கேற்ற காரியங்கள் முன்பதாக காணப்படாவிட்டாலும், முதலாவது அது அவரின் சிந்தனையில் காணப்பட்டு பின்பு வார்த்தை கூறப்பட்டபோது வெளிச்சமானது ஆகாயத்தில் உண்டானது. தேவன் பேசி அது கிரியையாய் வெளிப்படும் போது அதுவே அவரின் வார்த்தைக்கு வியாக்கியானமாயிருக்கிறது; இதை ஏன் ஒரு மனிதனால் பார்க்க முடியவில்லை? இதை ஏன் ஜனங்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை? 16. ஆதியிலே தேவன், ஒவ்வொரு காலத்திற்கும் அதன் தொடக்கம் முதல் முடிவு வரை தம்முடைய வார்த்தையைப் பகிர்ந்து வைத்தார். தொடர்ந்து ஏற்பட்ட காலங்களில் சபை உலகமானது தேவனுடைய வார்த்தையோடு தங்கள் பாரம் பரியத்தைக் கலந்து விட்டது. இவ்வித சூழ்நிலையில் தேவன் எப்பொழுதும் பழைய ஏற்பாட்டின் காலம் முதல் புதிய ஏற்பாட்டின் காலம் மூடிய தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். தேவனுடைய வார்த்தை தீர்க்க தரிசிக்கு வருகிறது. அது எவ்விதம் கிரியை நடப்பிக்கிறது? தேவனுடைய வார்த்தையை கிரியையின் மூலம் வெளிப்படுத்துகின்றது. அது மட்டுமல்ல, இது தவறு அது உண்மை என்றும் கூறுகிறது. ஒருவரும் அதற்கு வியாக்கியானம் கூறவேண்டுவதில்லை. ஏனென்றால் வார்த்தை தன்னில் தானே வியாக்கி-யானமுள்ளதாய் இருக்கின்றது. தேவன் வாக்களித்திருக்கிறார். ஆகவே அது நடந்தேறுகிறது! 17. இதை குறித்து எதையாகிலும் கூறினால் அது என்ன நன்மையைப் பயக்கக்கூடும்? தேவனுடைய வியாக்கியானம் தவறு என்று எந்த பாவமுள்ள மனிதன் கூற முயற்சிக்க முடியும்? (தேவன் வாக்குத்தத்தம் செய்து அது நிறைவேறும் பொழுது) அது தேவனே தம்முடைய வார்த்தையை வியாக்கியானம் செய்வதாகும். அவரே அதை வியாக்கியானப்படுத்தி கிரியையின் மூலம் தாம் வாக்குத்தத்தம் செய்ததை நிறைவேற்றுவார். 18. ஓ.. ஒவ்வொரு காலத்திற்கும் தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களை பகிர்ந்தளித்ததை சபையானது காணக் கூடுமானால் நலமாயிருக்கும்! எல்லாக் காலங்களிலும், குழப்பமான சூழ்நிலையில் (ஏழு சபையின் காலங்கள் ஊடே) தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பி, தாம் நிறைவேற்றுவேன் என்று சொன்ன வாக்குத்தத்தங்களை நிறைவேற்றினார். ஒரு காரியமாயினும் விடப்பட வில்லை. தாம் எதை செய்வேன் என்று சொன்னாரோ அவைகளையெல்லாம் செய்தார். 19. ஏசாயாவைக் கொண்டு கர்த்தர் இவ்விதமாக, 'ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' (ஏசாயா 7:14) என்று கூறின போது அது அப்படியே நடந்தேறிற்று. யார் அதை வியாக்கியானப்படுத்தக் கூடும்? தேவன் தாமே அதை வியாக்கியானப்படுத்தினார், யார் இதைக் குறித்து ஏதாகிலும் கூறக் கூடும்? ஒன்றும் செல்வதற்கில்லை. ஏனெனில் தேவன் ''கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று கூறின பொழுது கன்னிகை தானே கர்ப்பவதியானாள், ஆனால் சபையானது தங்களுடைய சொந்த எண்ணங்களில் இருந்தபடியால் கண் சொருகி போன குருடராய் இதைக்காணக் கூடாமற் போயிற்று. அவர்கள் எதிர்ப்பார்த்திருந்ததற்கு முற்றிலும் வித்தியாசப்பட்டதா யிருந்தது. 20. தேவன் வார்த்தையாக கிறிஸ்துவில் வெளிப்பட்டார். அவர் கூறினார் இவர் என்னுடைய நேச குமாரன்” என்று (மத் 17:5). கிறிஸ்துவே தேவனுடைய வெளிப்பாடாயிருக்கிறார். அவர் எப்பொழுதும் கிறிஸ்துவில் தம்முடைய வார்த் தையை வெளிப்படுத்துகிறார். கிறிஸ்துவே வார்த்தை. 21. நோவாவின் நாட்களில், கிறிஸ்து நோவாவில் இருந்தார். நீங்கள் இதை விசுவாசிக்கிறீர்களா! மழை பெய்யப் போகிறது, உலகமானது அழியப் போகிறது'' என்று தீர்க்கதரிசியாகிய நோவா கூறினான்; அது அப்படியேயாயிற்று. இதற்கு எந்தவித வியாக்கியானமும் தேவையில்லை, ஏனெனில் கூறினதை நிரூபிப்பதற்காக மழையானது பொழிந்தது. 22. அப்பொழுது கூடியிருந்தவர்களில் சிலர் இந்த மனிதன், தான் பேசுவது இன்னதென்று அறியாதிருக்கிறான்'' என்று கூறியிருக்கக்கூடும்! 23. ஆனால் தேவன் எப்பொழுதும் வாக்குத்தத்தம் செய்கிறவராயிருக்கிறார், ''உங்களில் ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்து அவன் கூறினக் காரியங்கள் நிறைவேறினால் அவனுக்கு செவி கொடுங்கள்'' இது உண்மை. நோவா தேவனுடைய வார்த்தையோடு ஒன்றியிருந்தான். ஆகவே அவன் மழையைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைத்த போது அது அப்படியே ஆயிற்று. அதற்கு எந்தவித வியாக்கியானமும் தேவைப்படவில்லை, 24. ஏசாயா 6 கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று கூறினான். அது நடந்தேறிற்று. அது முற்றிலும் வழக்கத்திற்கு மாறாக காணப்பட்டது. மேலும் அநேக நூறு வருடங்களுக்குப் பின் அந்த தீர்க்கதரிசனம் நிறைவேறின என்பதை பாருங்கள்! 25. மரியாளுக்கு கணவனாக யோசேப்பு நியமிக்கப்பட்டிருந்தான். (மத் 1:18). அவர்கள் கூடி வரும் மூன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. (மத் 1:14). யோசேப்பு , " நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்'' (மத் 1:19). இவ்விதமான சூழ்நிலை நீதிமானாகிய யோசேப்புக்கு அந்த ஜனங்களின் மத்தியில் எவ்விதம் காணப்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்! 26. அந் நாட்களில் ஒரு நியமனம் முறிவதென்றால் அது விபச்சார பாவத்திற்கு சமமானதாக கருதப்படும். மேலும், மரியாள் தன் தவறை மறைக்க யோசேப்பை ஒரு பாதுகாப்பாக (SHIELD) வைக்க முயற்சிக்கிறாள் என்று யோசேப்புக்கு தோன்றி இருக்கலாம். ஏனெனில் இங்கே அவர்கள் கூடிவரு முன்னே அவள் ஒரு கர்ப்பவதியாக காணப்பட்டாள் என்று வேதம் கூறுகின்றது. இதை போன்ற ஒரு காரியம், நியாயப்பிரமாணத்தின்படி கல்லெறிந்து கொல்லத்தக்கதான பாவம் ஆகும். 27 யோசேப்போ, நீதிமானாயிருந்தான். அவன் தேவனை விசுவாசித்தான். ஒரு வேளை மரியாள் தன்னுடைய அழகிய அமைதியான அந்த பெரிய கண்களைக் கொண்டு யோசேப்பை உற்று நோக்கி 'யோசேப்பே! பிரதான தூதனான காபிரியேல் என்னை சந்தித்து நான் கர்ப்பவதியாகப் போகிறேன் என்று கூறினார், ஆகவே, நான் ஒரு மனுஷனையும் அறியேன்'' என்று கூறியிருக்கலாம். 28. இங்கு யோசேப்பு, ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள் என்று கூறின வேத எழுத்துக்களை பார்த்திருக்கக் கூடுமானால், அறிந்திருக்கலாம்! தேவன் தம்முடைய சொந்த வார்த்தையை வியாக்கியானப்படுத்துகிறார். ஆனால் முற்றிலும் அது வழக்கத்திற்கு மாறானதாகக் காணப்பட்டது. 29. ஒவ்வொரு காலங்களிலும் இவ்விதம் தான் சம்பவிக்கின்றது தேவனுடைய வார்த்தையானது ஜனங்களுக்கு அந்நிய காரியமாக காணப்படுகின்றது தேவன் எப்பொழுதும் வழக்கத்திற்கு மாறானவைகளையே செய்கிறார். தேவன் எங்கிருந்தாலும் அது எப்பொழுதும் வழக்கத்திற்கு மாறானது தான். அது உலகத்தின் ஒழுங்கிற்கு எதிரிடையானது. ஏனெனில் ஜனங்கள், தாங்கள் சிந்தித்து, தங்கள் காரியங்கள் இவ்விதமாக இருக்க வேண்டும் என்று அமைத்து கொண்டதினால் தான். ஆனால் தேவன் அங்கு வந்து வழக்கத்திற்கு மாறான காரியங்களை செய்கிறார். 30. எப்படி இந்த கன்னிகை கர்ப்பவதியாகக்கூடும்? யோசேப்பு நேர்மை உள்ளவனாக இருந்தான். ஆகவே இந்த காரியத்தைக் குறித்து தேவனை தேட ஆரம்பித்தான். 31. பின்பு தேவன் அவன் சொப்பனத்தில் தோன்றி, தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது'' என்றார் (மத். 1:20). அது தான் அங்கு நடந்த காரியம். 32. இங்கு யோசேப்போடு தேவன் எவ்விதம் கிரியை செய்தார் என்பதை கவனித்தீர்களா? இரண்டாந்தரமான வழியாகிய ஒரு சொப்பனத்தின் மூலமாக அவனோடு கிரியைச் செய்தார். நாம் சொப்பனங்களை நம்புகின்றோம். நானும்கூட சொப்பனங்களை விசுவாசிக்கின்றேன், தேவன் எப்பொழுதும் ஜனங்களோடு சொப்பனங்களின் மூலம் உறவாடுகிறார். சொப்பனமானது சரியானபடி வியாக்கியானப்படுத்தப்படும் வரை அது தவறாகவோ அல்லது உண்மையாகவோ இருக்கலாம். பாருங்கள். ஆனால் யோசேப்புக்கு வியாக்கியானம் தேவையாயிருக்கவில்லை. தேவனே நேரிடையாக (DIRECT MESSAGE) யோசேப்புடன் பேசினார். ஏனெனில் அப்பொழுது ஏறத்தாழ 400-வருடங்கள் ஒரு தீர்க்கதரிசியும் வெளிப்பாட்டைக் கொண்டுவர தேசத்தில் இருந்ததில்லை. ஆக தேவன் தாமே சிறந்த வழியாக தம்முடைய குமாரனின் வருகைக்குப் பாதுகாப்பாக யோசேப்போடு நேரிடையாக வியாக்கியானம் ஒன்றும் தேவையில்லாமல் இடைப்பட்டார். மரியாள் ஒரு சரியான பெண்மணி அவளிடம் உற்பவித்த பரிசுத்த காரியம் தேவனுடைய குமாரனேயன்றி வேறு அல்ல'' என்று கூறினார். இதற்கு எந்தவித வியாக்கியானமும் தேவையில்லை. 33. தேவன் தாமே நேர்மையும் உண்மையுமுள்ள ஆத்துமாக்களுக்கு தம்முடைய சொந்த வியாக்கியானத்தை தெரியப்படுத்துகிறார். ஆண்களும், பெண்களு-மாகிய நீங்கள், ஒரு இரகசியமான காரியத்தைக் குறித்து, உண்மை உள்ளத்தோடும் விசுவாசத்தோடும் நோக்கிப் பார்க்கும் பொழுது தேவன் தாமே தம்முடைய வழியில் அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவார். முதலாவது அது தேவனுடைய வாக்குத்தத்தத்திலுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். யோசேப்பு தன்னுடைய பாரம்பரியத்தை விட்டு சற்று தேவ வார்த்தையில் ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் சொல்லப்பட்ட காரியங்களை தேடியிருப்பானானால் கன்னிகை கர்ப்பவதியாகும் காரியத்தைக் கண்டு பிடித்திருப்பான். 34. உலகத்தோற்ற முதல் தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகள் எல்லாருடைய வாக்கினாலும் உரைத்தவைகள் எல்லாம் நிறைவேறும் '(அப் 3:21) என்று பேதுரு கூறினார், ஒரு மனிதனும் தன் சொந்த வியாக்கியானத்தை இதற்கு கொடுக்க முடியாது. தேவன் எதை கூறினாரோ அது அவ்விதமே நிறைவேறும். அந்த நாளின் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேவனுடைய வார்த்தையாக அவர் இருந்தார். தேவன் விளம்பினார். அது அப்படியே ஆயிற்று. 35. இயேசு கிறிஸ்து பூமியில் இருந்த பொழுது சதுசேயரையும் பரிசேயரையும் பார்த்து, ''வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' என்றார் (யோவான் 5:39). அவருடைய ஊழியத்தில் காணப்பட்ட அற்புதங்களையும், அடையாளங்களை யும் கண்டு அவர்களால் அவரைப் புரிந்து கொள்ள முடியவில்லை. 36. பாருங்கள்! தேவன் தம்முடைய வார்த்தையை பகிர்ந்தளிக்கிறார். அந்த நாளில் தேவன் தம்மை இம்மானுவேலாக வெளிப்படுத்தும் காலமாக இருந்தது. இம்மானுவேல் என்பதற்கு 'தேவன் நம்மோடு இருக்கிறார்'' என்று பொருள் (மத் 1:83) " அவருடைய நாமம் அதிசயமானவர், ஆலோசனை கர்த்தா, சமாதான-பிரபு, சர்வவல்லமையுள்ள தேவன், நித்திய-பிதா என்று அழைக்கப்பட்டது (ஏசா9:6). தேவன் தாவீதிலிருந்தார். தேவன் மோசேயில் இருந்தார். இவ்விதம் தேவன் அந்தந்த காலங்களினூடே தம்மை வெளிப்படுத் தினார். ஆனால் இப்பொழுதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனை பெறுவாள், ''அவர் (தேவன்) நம்மோடு இருக்கிறார்' என்ற விதமாக வெளிப்பட்டார். 37. அவர் தன்னை தேவனுக்கு, சமமாக்கினபடியினால் அவரை சிலுவையில் அறைந்தார்கள். மேலும் அவர் ஓய்வு நாளை குறித்து ஓய்வு நாளுக்கும் தன்னை தேவனாக்கினார். (மத்.12:8) அவர் ஒரு சாதாரண மனிதனோ அல்லது தீர்க்கதரிசியோ அல்ல (சாதாரண மனிதனாகவும் தீர்க்கதரிசியாகவும் இருந்தும் கூட), ஆனால் அவர் தேவனாகவும், தீர்க்கதரிசியாகவும் இருந்தார். தேவன் எதை சொன்னாரோ அதை அவ்விதமே தத்ரூபமாக நிறைவேற்றும் தேவ வார்த்தை-யாக இருந்தார். "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்துக் கூடும்?' (யோவா.8:46.) வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று எண்ணுகிறீர்களோ என்னை குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே'' (யோவா 5:39) என்று இயேசு கூறினார். ஆனால் அவர்களுடைய பராம்பரியங்கள் என்னும் வேறொரு காலமான பொய்யான பிம்பத்தில (GLARE) அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். 38. சில வாரங்களுக்கு முன் பொய்யான பிம்பத்தில் (FALSE GLARE) ஜீவித்தல்'' என்னும் தலைப்பில் உங்களுக்குப் பிரசங்கித்தேன். சூரியனுடைய கிரணம் பட்டு பிரதிபலிக்கும் பிம்பம் பொய்யான ஒரு தன்மையையுண்டாக்குகிறது வேறொரு காலத்தில் ஏற்பட்ட பிம்பம் இன்று ஒரு பொய்யான பிரதிபலிப்பாகின்றது. ஜனங்கள் எப்பொழுதும் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த ஏதாகிலும் ஒரு காரியத்தில் தங்கள் ஓட்டத்தை வைக்கிறார்கள். லூத்தரன்கள், லூத்தரன் என்றும் பொய்யான பிம்பத்தில் நடந்து கொண்டிருக்கிறார்கள். லூத்தரின் காலத்தின் வெளிச்சம் அந்த நாளுக்கு அருமையானதாக இருந்தது வெஸ்லியின் வெளிச்சம் அந்நாளுக்கு அருமையானதாக இருந்தது, அவ்விதமே பெந்தேகோஸ்தும். நாம் ஒரு ஏணியில் ஏறுவது போல் ஏறிக் கொண்டே போகிறோம். நாம் வேறொரு காலத்தில் தற்பொழுது ஜீவிக்கிறோம். நாம் பின்னிட்டுப் பாராமல் முன்னோக்கி ஏறிச் சென்று கொண்டேயிருக்க வேண்டும். 39. நாம், நம்மை சில காரியங்களில் திட்டம் செய்து எல்லாம் பெற்றாகி விட்டது என்போமானால் பாரம்பரியமானது நம்மை மூடிக்கொள்ளும். அவைகள் எல்லாம் சரி தான், ஆனால் இந்நாளுக்குரியதல்ல. அவைகள் வேறொரு காலத்தின் காரியமாகும். நாம் முன்னேறி செல்கின்றோம்-! வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து இந்நாளுக்குரிய வாக்குத்தத்தம் என்ன என்று தேட ஆரம்பிப்போமானால், அப்பொழுது நாம் எங்கே இருக்கிறோம் என்றும், எதிலே நிற்கிறோம் என்றும் அறிந்து கொள்ளலாம். 40. லூத்தரின் காலமாகிய சர்தை சபையின் காலத்திற்குரிய வாக்குத்தத்தத்தை கவனித்துப்பாருங்கள். இந்தக் காலத்தில் எந்த தன்மையுடைய மனிதன் குதிரையின் வெளி;6-ம் அதிகாரம்) மேல் ஏறிச் சென்றான். சீர்திருத்தமாகிய இந்த காலத்தை "மனிதனின் தந்திரம்'' சந்தித்தது. வெஸ்லியின் காலம் தொடங்கி பெந்தேகோஸ்தேயினரின் காலம் முடிய, அந்தந்தக் காலத்திற்குரிய பிசாசின் தந்திரம் குதிரையின் மேல் பிரயாணம் செய்தது. வேதவாக்கியங்களை உற்று கவனித்து நாம் எங்கேயிருக்கிறோம் என்பதை பாருங்கள். ஆகவே தான் இயேசு! வேதவாக்கியங்களை ஆராய்ந்துப் பாருங்கள்'' என்றார். 41 தேவகுமாரன் வெளிப்படும் காலமாகிய இந்த காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். என்று நான் "விசுவாசிக்கிறேன். எந்த சமயத்திலும் அவர் தோன்றலாம் என்ற மணி நேரத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டு இருக்கிறோம் என்று நான் விசுவாசிக்கிறேன். இந்த உலகத்தின் சரித்திரமானது முடிவடையும் கடைசி மணி நேரத்தில் நாமிருக்கிறோம் என்று வேதவாக்கியங்கள் கூறுகின்றன. இதற்கேற்ப காரியங்கள் உருவாகுவதை என்னால் காணமுடிகிறது. உலக ஐக்கிய ஆலோசனை சங்கமானது (WORLD COUNCIL OF CHURCHES) சபைகள் எல்லாம் மிருகத்தின் முத்திரையை தரித்துக் கொள்ள வழி நடத்திக் கொண்டிருக்கின்றது. ரோம மார்க்கம் என்ன செய்து கொண்டிருக்கிறதென்பதை பாருங்கள். இவர்களெல்லாம் ஒன்று சேர்ந்து சுவிசேஷ கதவுகளை அடைத்துக் கொண்டும். எல்லோரையும் அவர்கள் காட்டும் வெளிச்சத்தில் நடக்க வேண்டுமென்றும், இல்லையென்றால் வேறொன்றும் செய்யக்கூடாத கட்டடத்தில் கொண்டு - வந்து நிறுத்திக் கொண்டிருப்பதை பாருங்கள். தேவனுடைய வார்த்தையைச் சார்ந்து அதை விசுவாசிப்பதைத் தவிர வேறொன்றும் நமக்கில்லை. ஏனென்றால் தேவனுடைய வார்த்தை மட்டுமே என்றைக்கும் சரியானதாகும். 42. எந்த சபையின் காலத்திலும் தேவன் சபைக்கு வெளியே இல்லை. ஆனால் லவோதிக்கேயா சபையின் காலமாகிய இக்காலத்தில் தான் கிறுஸ்துவானவர் வெளியே விடப்பட்டு அங்கிருந்து கதவை தட்டுகிறவராக காணப்படுகிறார் வெளி:3:20). என்ன நடந்தது? இந்த உலக ஐக்கிய சபை அவரை வெளியே தள்ளி விட்டது. வேதம் அவர் வெளியே தள்ளப்பட்டிருப்பார் என்று கூறுகிறதா! அவர் அவ்வண்ணமேயுள்ளார். ஐக்கிய சபை எதற்காக தன் கதவுகளை அடைத்துக் கொள்கிறது? தேவனுடைய வார்த்தைக்காகவே! கிறிஸ்துவே வார்த்தையாய் இருக்கிறார். அவர் என்றென்றைக்கும் வார்த்தையாகவே இருக்கிறார். இன்றும் கூட! 43. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும், உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப்பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமா-வையும், ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவாக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும். இருக்கிறது'' (எபி 4:12). ஆம், தேவனுடைய வார்த்தை இவ்வண்ணமேயுள்ளது. இயேசு தம்மை அந்த நாளில் அவர்களுக்கு (இஸ்ரவேலர்) அறிமுகப்படுத்தின பொழுது இவர் யார் என்று அவர்கள் கண்டு கொண்டு இருந்திருக்க வேண்டும். 44. இயேசுகிறிஸ்து தம்முடைய ஊழியத்தின் துவக்கத்தில் செய்த காரியத்தை கவனித்துப் பாருங்கள்: சீமோன் பேதுரு இயேசுவினிடத்தில் வந்த பொழுது அவர் அவனை நோக்கி, "நீ யோனாவின் குமாரனாகிய சீமோன்'' என்று கூறினார். (உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்: அவருக்குச் செவி கொடுப்பீர்களாக.'' (உபா :18:15) என்று மோசே கூறினதை பேதுரு அறிந்திருக்கக்கூடும்'') அநேக நூற்றாண்டுகளாக தீர்க்கதரிசி இஸ்ரவேலருக்-குள்ளாக காணப்படாத நேரத்தில் இயேசு தீர்க்கதரிசியாக அவர்கள் மத்தியில் காணப்பட்டு பேதுருவைப் பார்த்து, "நீ இன்னாருடைய மகன்'' என்று கூறின பொழுது பேதுருவால் அவர் யார் என்று புரிந்து கொள்ள இயன்றது ஒரு வியப்பிற்குரிய காரியமல்ல, 45. பிலிப்பு நாத்தான்வேலை இயேசுவினிடத்தில் அழைத்து வந்தான். இயேசு அவனைப் பார்த்து, ‘‘இதோ கபடற்ற உத்தம இஸ்ரவேலன்'' என்றார். அதற்கு நாத்தான் வேல்! நீர் என்னை எப்படி அறிவீர் என்றான் . 46. இயேசு அவனை நோக்கி: பிலிப்பு உன்னை அழைக்கிறதற்கு முன்னே, நீ அத்தி மரத்தின் கீழிருக்கும்போது உன்னைக் கண்டேன் என்றார். 47. அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன்: நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்' (யோவான் 1:47-49) ஆம், அவன் அவரை அறிந்து கொண்டான். இதற்கு எந்த வியாக்கியானமும் தேவையில்லை. யேகோவாவே அவனுக்கு அதை வெளிப்படுத்தினார். 48, அவரை (இயேசுவை) விசுவாசியாதவர்கள் அநேகர் இருந்தனர். அவர்கள் இயேசுவை பிசாசுகளின் தலைவனாகிய பெயெல்செபூல் என்றும், ஏதோ ஒருவித வித்தை செய்கிறவனென்றும், எதிர்காலத்தைப்பற்றி குறிசொல்லு-கிறவனென்றும் அழைத்தார்கள். 49. இயேசுகிறிஸ்து அவர்களை நோக்கி, "எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்தாவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை'' (மத்தேயு 12;32) என்று கூறினார். வேறுவிதமாக கூறினால் “பரிசுத்த ஆவியானவர் பூமியில் வந்து திரும்பவும் தான் செய்த கிரியைகளையே செய்யும் பொழுது (அப்போஸ்தலரின் மத்தியில் நடந்த கிரியைகள் அதற்கு விரோதமாக பேசுவார்களேயானால் அது இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப் படுவதில்லை'' இயேசுகிறிஸ்து நம்முடைய நாட்களை குறித்து தீர்க்கதரிசனம் உரைத்தார். நாம் அதை காணத்தக்கதாக! இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். 50. மோசேயினுள் இயேசுகிறிஸ்து இருந்தார் என்பதை நினைவு கூருங்கள். தாவீதினுள் இயேசுகிறிஸ்து இருந்தார். அவன் தன் சுய ஜனங்களால் தள்ளப் பட்டவனாக ஒலிவமலையின் மேல் ஏறி எருசலேமுக்காக அழுதானென்றால் (11.சாமு.15:30) அது அவனாக செய்யவில்லை; கிறிஸ்துவே அவனிலிருந்து அவ்விதம் செய்தார். பின்பு 800 வருடங்கள் கழித்து இயேசுகிறிஸ்து ஒலிவ மலையின் மேல் ஏறி எருசலேமைப் பார்த்து, ''எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலை செய்து உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின் கீழே கூட்டிச் சேர்த்துக் கொள்ளும் வண்ணமாக நான் எத்தனை தரமோ உன் பிள்ளை களைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற் போயிற்று'' (லூக்கா; 13:34) என்று கூறினார். 51. யோசேப்பு இயேசுகிறிஸ்துவுக்கு உவமையாக காணப்பட்டான். ஏறத்தாழ 30-வெள்ளிக்காசிற்கு விற்கப்பட்டான். போர்த்திபாரினால் பராமரிக்கப்பட்டான். செய்யாத குற்றத்திற்காக சிறைச்சாலையில் தள்ளப்பட்டான். சிறைச் சாலையில் தேவனால் உயர்த்தப்பட்டான். (இருவர் கண்ட சொப்பனங்களை வியாக்கியானம் செய்ய, ஒருவன் கொலை செய்யப்படவும், ஒருவன் உயர்ந்த ஸ்தானத்தில் வைக்கப்படவும், பார்வோனினால் நிர்ணயம் செய்யப்பட்ட சம்பவம்) ஆதி.40:46 பின்பு பார்வோனால் உயர்த்தப்பட்டு அவனுடைய வலது பாரிசத்தில் காணப்பட்டு, அவன் செல்லும்பொழுது எக்காளம் தொனிக்கையில் எல்லா தலைகளும் வணங்கத்தக்கதாக உயர்த்தப்பட்டான். யாராவது பார்வோனிடம் வரவேண்டுமென்றால் யோசேப்பின் மூலமாக அன்றி வர இயலாத நிலையில் உயர்ந்த ஸ்தானத்தில் காணப்பட்டான். இயேசுவால் அல்லாமல் ஒருவனும் தேவனிடத்தில் சேர முடியாது. எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்கு நிழலாகவும், உவமையாகவும் காணப்பட்டான். 52. இயேசுகிறிஸ்து பூமியிலிருந்த போது தீர்க்கதரிசிகளால் கூறப்பட்ட யாவற்றிற்கும் நிறைவேறுதலாயிருந்தார், தேவனுடைய வார்த்தையின் வெளிப்பாடாயிருந்தார். இதற்கு எந்தவித வியாக்கியானமும் தேவையில்லை. 53. நாத்தான்வேல் இயேசுவைக் கண்டபொழுது வணங்கி, ‘ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான் (யோவான் 1: 49). ஏனெனில் இயேசு செய்த காரியம் மனிதனால் செய்யக்கூடாதது என்று அவன் கண்டுகொண்டான். 54. நிக்கொதேமு இராக்காலத்தில் இயேசுவினிடத்தில் வந்தபொழுது இதே காரியத்தைதான் சொன்னான்: "ரபீ நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், (பன்மையில் உள்ளது கவனிக்கவும்) ஏனெனில் ஒருவனும் தன்னுடனே தேவன் இராவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான்' என்றான். (யோ:3:8) நிக்கொதேமு, நாங்கள் அறிந்திருக்கிறோம்'' என்று கூறினான். யார் அந்த நாங்கள்? பரிசேயராகிய அந்த கூட்டத்தார் தாமே. அவர்கள் இயேசுவை புரிந்து கொண்டார்கள். இருந்தாலும் அவர்களால் இயேசுவின் பக்கம் சேரமுடியவில்லை. ஏனென்றால் தங்களுடைய நாட்களின் ஸ்தாபனக்கட்டிற்குள்ளே மிகவும் பலமாக கட்டப்பட்டு இருந்தார்கள். 55. கடந்த 40-வருட காலங்களாக தேவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் இந்த அமெரிக்க நாட்டையும் உலகத்தையும் அசைத்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் ஆண்களும், பெண்களும் இன்றுமாக இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே காணப்படுகின்றார்கள். இவர்களுக்கு சம்பவித்த காரியம் என்ன-? ஸ்தாபனங் களுக்குள் பலமாக ஊன்ற கட்டப்பட்டிருப்பதே காரியம், வேறொரு காலத்தின் சத்தியத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொருவரும், தான் ஒரு மெத்தோடிஸ்டாகவோ, பிரஸ்பிட்டேரியனாகவோ, அல்லது லுத்தரனாகவோ இருக்க வேண்டுமென்று தான் விரும்புகிறார்கள். கடந்த காலத்தின் மாயையில் ஜீவிக்கின்றார்கள். 56. அவ்விதமே பரிசேயரும், சதுசேயரும், யூத ஜனங்களும், மோசேயின் காலத்தில் ஏற்பட்ட சத்தியத்தில் ஜீவித்துக் கொண்டிருந்தார்கள். "நாங்கள் மோசேயினுடைய சீஷர்'' என்று கூறினார்கள் (யோ:9: 28 கடைசி பாகம்) 29.2 57. நீங்கள் மோசேயை விசுவாசித்தீர்களானால், என்னையும் விசுவாசிப்பீர்கள்; அவன் என்னைக்குறித்து எழுதியிருக்கிறான்'' என்று இயேசு கூறினார் (யோவான்:5:46). 58. லூத்தரின் காலத்தையும், வெஸ்லியின் காலத்தையும் (மெத்தோடிஸ்டு) அறிந்திருந்தீர்களென்றால், இந்த காலத்தையும் இதற்குரிய செய்தியையும் அறிந்து கொள்வீர்கள். ஏனென்றால் கிறிஸ்து தாமே இந்த காலத்தைக் குறித்து கூறியிருக்கின்றார். தேவனுடைய வார்த்தையால் உரைக்கப்பட்டவைகள் எல்லாம் இந்த காலத்தில் நிறைவேற வேண்டியதாயிருக்கின்றது. யாராவது ஒருவர் இதை வியாக்கியானப்படுத்த தேவையில்லை. தேவன் தாமே அதை வியாக்கியானப்படுத்திக் கொண்டு இருக்கின்றார். தேவனுடைய வாக்குத் தத்தங்கள் எப்பொழுதும் அவர் கூறிய காரியங்களை நிரூபிக்கின்றன. அதுவே அதற்கு வியாக்கியானம். 59. என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்தான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்'' என்று இயேசு கூறினார் (யோவான்:14:12). இதை இயேசு கூறினாரா? ஆம்! உண்மை. இதற்கு ஏதும் வியாக்கியானம் தேவையில்லை. யாராவது அதே கிரியைகளை செய்வார்களென்றால் அது தேவனாயிருக்கின்றதே! நிச்சயமாக கூறலாம்..... 60. ''லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும்'' (லூக்: 17:28) என்று இயேசு கூறினார். இதை இயேசு கூறினாரா? ஆம்! உண்மை . இதற்கு ஏதும் வியாக்கியானம் தேவையில்லை. சிலர் சொல்லலாம். இல்லை. அவர் இதை குறிப்பிடவில்லையென்று! 61 லோத்தின் நாட்களை பற்றி இயேசு கூறினது சரியே! லோத்தினுடைய நாட்களில் சம்பவித்தது என்ன-? சற்று நேரம் சிந்திப்போம். 62 லோத்தின் நாட்களில் மூன்று விதமான ஜனங்கள் காணப்பட்டார்கள். ஒன்று விசுவாசி, இரண்டாவது பாவனை விசுவாசி, மூன்றாவது அவிசுவாசி. இந்த 3-பிரிவினரும் எல்லாக் கூட்டங்களிலும் காணப்படுகின்றனர். சோதோமின் ஜனங்கள் அவிசுவாசிகள் என்றும், லோத்து ஒரு பாவனை விசுவாசி என்றும் நாம் புரிந்து கொள்ளலாம்.' 63 ஆபிரகாம் விசுவாசியாக இருந்தான். அவனிடம் தான் உடன்படிக்கையை தேவன் செய்தார், மேலும் அவன் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குமாரனுக்காக காத்திருந்தான். எதிர்பார்த்து கொண்டுமிருந்தான். ஆமென்! அது உண்மை. ஆபிரகாம் சோதோமில் காணப்படவில்லை. அவன் இன்றைக்குள்ள ஆவிக்கு உரிய சபைக்கு ஒரு அடையாளமாக இருக்கின்றான். 64. இன்றைக்குள்ள ஸ்தாபன சபைகளுக்கு லோத்து ஒரு அடையாளமாக காணப்படுகின்றான் வேதம் என்ன கூறுகிறது-? நாள் தோறும் அவர்களுடைய அக்கிரமக் கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்து'' (11.பேதுரு:2:8). ஏன் அவர்களுடைய கிரியைகளுக்கு எதிராக நிற்கக்கூடிய சக்தி அவனுக்கு இல்லாமற் போயிற்று-? இன்றைய நிலைமையையும் கவனித்துப்பாருங்கள். அநேக நல்ல மனிதர்கள் சபைகளில் உட்கார்ந்து கொண்டு, பெண்கள் அவலட்சணமான ஆடைகளை அணிந்து கொண்டு வருவதையும், ஆண்கள் அவலட்சணமான காரியங்களை செய்வதையும், அங்கத்தினர்கள் ஓய்வு நாளில் தேவனை ஆசரிக்காமல், பலவித விளையாட்டுகளில் ஈடுபடுவதையும், உல்லாச சுற்றுலாக்களில் நேரம் செலவிடுவதையும், நீந்தி விளையாடு வதையும் சாட்சிகளை டெலிவிஷனை (படக்காட்சி) வீட்டில் கண்டு ரசிப்பதையும் காணத்தான் செய்கிறார்கள். அதைக் குறித்து தவறு என்றும் யோசிக்கின்றார்கள் ஆனால், இது பாவம் என்று கூறினால் ஆலோசனை சங்கம் அவர்களை சபைக்கு புறம்பாக்கிவிடும் என்று பயப்படுகிறார்கள், இது என்ன சம்பவம்? லோத்தின் நாட்கள் திரும்பவும் வந்திருக்கின்றதே! தன் சாளரத்தின் வெளியே பாவம் நடப்பதைக் கண்டு அது பாவம் என்று சொல்ல லோத்து பயந்தான். 65 ஆபிரகாமோ இந்த குழப்பத்தில் காணப்படவில்லை. ஆபிரகாம் இன்றைக்கு உரிய ஆவிக்குரிய சபைக்கு ஒரு அடை யாளம். லோத்தின் நாட்களின் முடிவில் என்ன நடந்தது என்று பாருங்கள். வானத்திலிருந்து அக்கினி வந்து அக்கிரம் செய்கைக்காரரை (புறஜாதியாரை) அழித்து அவர்கள் பட்டணங்களையும் கவிழ்த்துப் போட்டது. இன்றைய உலகத்திற்கு அது ஒரு நிழலாக காணப்- படுகின்றது. முடிவில் தேவன் இந்த புறஜாதியின் உலகத்தையும் அக்கினியி-னால் அழிப்பார். ''பூதங்கள் வெந்து உருகிப்போம்; பூமியும் அதிலுள்ள கிரியைகளும் எரிந்து அழிந்துபோம்'' (II பேது:3.10 கடைசி பாகம்). 66 இப்பொழுது இந்தக் காரியத்தை உருவகப்படுத்திப் பார்ப்போம். இங்கு ஆபிரகாம் ஏற்கனவே சோதோமிற்கு வெளியே காணப்படுகின்றான். ஆனால் லோத்தோ இன்னுமா சோதோமில் காணப்படுகிறான். 67 ஒரு ஆச்சரியமான சம்பவம்: ஒரு பகலின் உஷ்ணமான வேளையில் ஆபிரகாம் கூடார வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, மூன்று புருஷர் தன்னை நோக்கி வருவதை கண்டான் (ஆதி:18:1-2). ஒரு வேளை தன் மந்தையை மடக்கி விட்டு ஓய்வுக்காக ஆபிரகாம் உட்கார்ந்திருக்கக் கூடும். தன்னிடமாய் வரும் மனிதர்களை கண்ட ஆபிரகாமுக்கு ஏதோ ஓர் உள்ளுணர்வு அவனை தட்டி எழுப்பிற்று; இவர்கள் சாதாரண மனிதர்களல்லவென்று! 68 தேவன் எப்பொழுதும் வித்தியாசப்பட்டவர் தாம். அவர் ஜனங்கள் மத்தியில் வரும் பொழுது ஜனங்கள் அவரைக் கண்டுக் கொள்வார்கள். ஏனென்றால் ஏதோ ஓர் உள்ளுணர்வு அவர் தேவனென்று கூறும், அது மட்டுமல்ல, தேவனுக்குரிய நிரூபணமும் அங்கே காணப்படும். 69 அவன் கூடார வாசலிலிருந்து அவர்களுக்கு எதிர் கொண்டு ஒடி தரை மட்டும் குனிந்து உபசரித்து, ''கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரட்டும், உங்கள் கால்களை கழுவி, மரத்தடியில் சாய்ந்து கொண்டிருங்கள்'' என்றும், பின்பு "சாராரிடத்திற்கு போய் : நீ சீக்கிரமாய் மூன்றுபடி மெல்லியமாவு எடுத்துப் பிசைந்து, அப்பம் சுடு'' என்றும், பின்பு மாட்டு மந்தைக்கு ஓடி, ஒரு நல்ல இளங்கன்றை பிடித்து, வேலைக்காரன் கையிலே கொடுத்தான். அவன் அதைச் சீக்கிரத்தில் சமைத்தான், ஆபிரகாம் வெண்ணெயையும், பாலையும் சமைப்பித்த கன்றையும் எடுத்து வந்து, அவர்கள் முன்பாக வைத்து, அவர்கள் அருகே மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவர்கள் புசித் தார்கள்'' (ஆதி 18:2-8). 70 நன்றாக கவனித்துப் பாருங்கள் : மூவரில் இரண்டு பேர் சோதோமிற்கு சென்றார்கள் (ஆதி:9:1). தயவு செய்து இதை தவற விடாதீர்கள். ஏனெனில் இயேசு கூறின காரியத்தை உங்களுக்கு விளக்க முயலுகிறேன். அந்த இரண்டு புருஷரும் சோதோமில் பிரசங்கித்தார்கள் (ஆனால் ஆபிரகாமோடு ஒரு புருஷன் தங்கிவிட்டார். ஒரு அடையாளம் ஆபிரகாமுக்கு காட்டப்பட்டது). சோதோமிலும் ஒரு அடையாளம் காட்டப்பட்டது. சோதோமியர் களைகளானது குருடாக்கப் பட்டது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது எப்பொழுதும் அவிசுவாசியின் கண்களை குருடாக்கும். 71 இங்கு ஆபிரகமோடு ஒரு புருஷன் தங்கி தம்முடைய அடையாளத்தைக் காட்டுகின்றார். 72. உலக சரித்திரத்தில், சபையின் காலங்களினூடே இந்தக் காலத்திற்கு முன்பு யாராவது ஒரு மனிதன் தன்னுடைய பெயரின் பின்பாகம், காம்'' (H-A-M) என்று முடியத்தக்கதாக (ஆபிரகாம் என்பது போல) தோன்றி வெது வெதுப்பான சபைகளின் மத்தியிலும், ஸ்தாபனங்களின் மத்தியிலும் சுவிசேஷத்துடன் சென்றதுண்டா என்று வேத வாக்கியங்களை ஆராயும் சரித்திரக்காரர்கள் கூற முடியுமா? என்று கவனித்துப் பாருங்கள். ஆனால் இன்று அவ்விதமாக பெயரையுடைய ஒரு மனிதன், பில்லி கிரகாம் (BILLY GRAHAM), தேவனுடைய மனிதனாக ஸ்தாபனங்களின் மத்தியிலும், அரசியல்வாதிகளின் மத்தியிலும் சென்று சவிசேஷத்தைப் பிரசங்கிப்பதை கவனியுங்கள். 73 இந்த பில்லிகிரகாமை அமெரிக்க நாடுகளுக்கு ஜனாதிபதியாக்க அநேக சாராய கம்பெனிகளும். சிகரெட் கம்பெனிகளும் அவரை கேட்டுக் கொண்டார்கள். ஆனால் இவரோ அவர்களின் அழைப்பை அல்லத் தட்டினார். அநேக கோடிக் கோடியான பணம் (DOLLARS) அவர்கள் அவருக்காக செலவழித்திருக்க முடியும். ஆனால் அவர் அதை அவர் விரும்பவில்லை. கர்த்தர் அந்த மனிதனை ஆசீர்வதிப்பாராக. அவருடைய அஸ்திபாரம் உலகமல்ல, அவர் தேவனுடைய தூதனாக சோதோமியரைப் போன்ற ஜனங்களின் மத்தியில் காணப்படுகின்றார். இது முற்றிலும் சரியே. 74 ஆனால் இங்கு ஆபிரகாமோடு ஒரு புருஷன் தங்கி விட்டதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், மற்ற இரண்டு புருஷர்கள் சோதோமை நோக்கி சென்று விட்டார்கள். இன்றைக்கு நவநாகரீக சுவிசேஷ பிரசங்கிகள் ஸ்தாபனங்களின் மத்தியில் செல்லுவதை போல! ஆனால் ஒரு புருஷன் ஆபிரகாமோடு தங்கி அடையாளத்தைக் காண்பித்தார். 75. இங்கு சற்று கவனியுங்கள். சில நாட்களுக்கு முன் அவனுடைய பெயர் ஆபிராம் எனவும், அவன் மனைவியின் பெயர் சாராய் என்றும் அழைக்கப்பட்டது. பின்பு தேவன் அவனுக்கு தோன்றி அவன் பெயரை ஆபிராமிலிருந்து ஆபிரகாம் (ABRAHAM) என்றும் அவன் மனைவியின் பெயர் சாராயிலிருந்து சாராளாக மாற்றினேன்'' என்று கூறினார்: (ஆதி: 17:5, 15) (ஆங்கிலத்தில் கிரகாம் G-R-A-H-A-M 6 எழுத்துக்களை கொண்டதாயிருக்கிறது. இது மனிதனை குறிக்கிறது) ஆனால் ஆபிரகாம் ஆங்கிலத்தில் A-B-R-A-H-A-M என்று எழுத்துக்களை உடையதாய் இருக்கின்றது. (பூரணத்தையும் தேவத்துவத்தையும் ஏழு என்னும் எண் குறிக்கின்றது - தமிழாக்கியோன்). 76 அன்றுள்ள ஆவிக்குரிய சபையில் ஏழு எழுத்துக்களுடைய ஒரு மனிதன் காணப்பட்டான். (ஆபிரகாம் A.B-R-A. H-A-M). தேவன், அவனை கூப்பிட்டு, உன் மனைவியாகிய சாராள் எங்கே'' என்று கேட்டார் (ஆதி: 18:9). 77 தேவன் இதை கேட்கும் பொழுது, "அதோ கூடாரத்தில் இருக்கிறாள்'' என்றான். (ஆதி 18: 10). 78. 11 அப்பொழுது அவர்: ஒரு உற்பவ காலத் திட்டத்தில் நிச்சயமாய் உன்னிடத்திற்கு திரும்ப வருவேன்'' (ஆதி:18:10) என்றார். இங்கு தேவன் தம்மை மட்டும் தனியாக உருவகப்படுத்தி (PERSONAL PRONOUN) காட்டுவதை பாருங்கள்! வருவேன்'' என்ற பதத்தை கவனியுங்கள். 79 சாராள் தனக்குள்ளாக நகைத்தாள். ஆபிரகாமும் சாராளும் வயது சென்று முதிர்ந்தவர்களாயிருந்தார்கள்; ஸ்திரிகளுக்குள்ள வழிபாடு சாராளுக்கு நின்று போயிற்று. ஆகையால் சாராள் தன் உள்ளத்தில் நகைத்து, நான் கிழவியும், என் ஆண்டவன் (ஆபிரகாம்) முதிர்ந்த வயதுள்ளவருமான பின்பு, எனக்கு இன்பம் உண்டாயிருக்குமோ என்றாள்” (ஆதி:18:11-12). இது எவ்விதம் சாத்தியம் என்று தன் உள்ளத்தில் யோசித்தாள். 80 அப்பொழுது அந்த புருஷன் (மாமிசத்தில் வந்த தேவன்) ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளை பெறுவது மெய்யோ என்று சொல்லுவானேன்? கர்த்தரால் ஆகாத காரியம் உண்டோ-? உற்பவக் காலத் திட்டத்தில் உன்னிடத்தில் திரும்ப வருவேன்; அப்பொழுது சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் என்றார். ' (ஆதி. 18:13,14) 81 இங்கு கவனியுங்கள்: இவ்விதமாக சாராளின் உள்ளத்தில் ஏற்பட்ட காரியத்தை கண்டு பிடித்து (DISCERNMENT) ஆபிரகாமுக்கு கூறியதைப் போன்று அதே ஒரு ஊழியத்தை இயேசு கிறிஸ்துவும் தம்முடைய நாட்களில் செய்தார் அல்லவா! இயேசுகிறிஸ்து தம்மை சூழ்ந்த ஜனங்களின் உள்ளத்தில் உள்ளதை எல்லாம் அறிந்தவராயிருந்தார். பேதுரு யார் என்று கூறினார்; அவனுடைய தகப்பனுடைய பெயரை கூறினார். நாத்தான்வேலுக்கும் அதே அடையாளம் காண்பிக்கப்பட்டது. 82 யாக்கோபின் கிணற்றண்டையில் காணப்பட்ட சாமாரிய 'ஸ்திரியுடன் நடந்த சம்பாஷனை என்ன? '' இயேசு அவளை நோக்கி: தாகத்துக்குத்தா'' என்றார்: 83 யூதர்கள் சமாரியருடனே சம்பந்தம் கலவாதவர்களானபடியால் சமாரியா ஸ்திரீ அவரை நோக்கி: நீர் யூதனாயிருக்க சமாரியா ஸ்திரியாகிய என்னை நோக்கி தாகத்துக்கு தா என்று எப்படி கேட்கலாம், என்றாள். 84 இயேசு அவளுக்கு பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத் தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார், என்றார்'' (யோவா.4:8-10), பின்பு சம்பாஷனை தொடர்ந்து இயேசு அவளை நோக்கி: நீ போய், உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ: எனக்கு புருஷன் இல்லை, என்றாள். இயேசு அவளை நோக்கி: எனக்கு புருஷன் இல்லை என்று நீ சொன்ன து சரிதான். எப்படியெனில், ஐந்து புருஷர் உனக்கு இருந்தார்கள். இப்பொழுது உனக்கிருக்கிறவன் உனக்கு புருஷனல்ல, இதை உள்ளபடி சொன்னாய், என்றார்'' (யோவான்4:16-18). அந்த ஸ்திரீ இயேசுவை இன்னார் என்று கண்டு கொண்டாள். 85. அந்தக் காலத்தில் சடங்காச்சாரங்களில் வாழ்ந்து கொண்டிருந்த வேதபாரகருக்கும் இந்த ஸ்திரீக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். அவர்கள் "" இது பிசாசினாலுண்டானது என்றார்கள். தங்களுடைய சபையின் மக்களுக்கு ஏதாகிலும் ஒரு பதிலை சொல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் இருந்தார்கள். 86. இந்த முன்குறிக்கப்பட்ட வித்தாகிய ஏழை ஸ்திரி செய்ததை பாருங்கள்! தன் நாட்களின் சபையின் காரியங்களினால் சோர்ந்து போனவளாக, மனநோய் கொண்டவளாக, தெருக்களில் அலைந்து விபச்சாரியாக காணப்பட்டாள். ஆனால் அந்த நாளுக்குரிய செய்தியான இயேசுவை கண்டபொழுது அவள் உணர்ந்து கொண்டாள். ''ஆண்டவரே, நீர் தீர்க்கதரிசி என்று காண்கிறேன். கிறிஸ்து எனப்படுகிற மேசியா வருகிறார் என்று அறிவேன், அவர் வரும் போது எல்லாவற்றையும் நமக்கு அறிவிப்பார், என்றாள்'' (யோவான்.4:19,25). ''அதற்கு இயேசு உன்னுடனே பேசுகிற நானே அவர் என்றார் (யோ.4:26) மறைந்திருந்த வித்தானது ஜீவன் பெற்று துள்ளிற்று. 87. இதற்கு ஏதும் வியாக்கியானம் தேவையில்லை. இயேசு அற்புதத்தை அங்கு நடப்பித்து தாம், அவர்களுக்கு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா தான் ('உன் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார்: அவருக்கு செவி கொடுப்பீர்களாக' (உபா. 18:15) என்று மோசே சொல்லியிருந்தார்) என்று சாட்சி பகிர்ந்தார். தேவனுடைய வார்த்தையின் நிறைவேறுதலாய் அவர் காணப்பட்டார். 88. பின்பு அந்த சமாரிய ஸ்திரி "தன் குடத்தை வைத்து விட்டு, ஊருக்குள்ளே போய், ஜனங்களை நோக்கி: நான் செய்த எல்லாவற்றையும் ஒரு மனுஷன் எனக்கு சொன்னார். அவர் கிறிஸ்து தானோ, என்றாள்'' (யோவான் 4:28,29) 89. இங்கு கவனியுங்கள், ஆபிரகாமோடு காணப்பட்ட புருஷன் தன் முதுகை சாராள் இருந்த கூடாரத்திற்கு எதிராக வைத்திருந்த போதிலும் கூடாரத்தினுள் இருந்த சாராளின் இருதயத்தின் சிந்தனைகளை அறிந்து ஆபிரகாமிடம் கூறினார். 90. தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்த பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமா-வையும் ஆவியையும், கணுக்களையும் உனையும் பிரிக்கத்தக்கதாக உருவக்குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளை யும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது" (எபி.4:12) என்று வேதம் கூறுகிறது. ஒவ்வொரு காலத்திலும் தீர்க்கதரிசி வரும் பொழுது தேவனுடைய வார்த்தையோடு வருகிறான், அந்த காலத்திற்குரிய செய்தியோடு வருகிறான். அந்த தேவ வார்த்தை எவ்விதம் கிரியை செய்கிறது? மனுஷருடைய சிந்தனைகளை வகையறுக்கிறதாயிருக்கிறது. 91. தேவ வார்த்தை அவ்விதமே இயேசு கிறிஸ்துவில். கிரியை செய்தது. ஏனெனில் அவர் தேவ வார்த்தையின் பரிபூரணமாயிருந்தார். 92.லோத்தினுடைய நாட்களில் நடந்தது போலவும் நடக்கும், மனுஷகுமாரன் வெளிப்படும் நாளிலும் அப்படியே நடக்கும்'' (லூக்கா 17:28-30), தேவனுடைய ஆவி திரும்பவும் மனுஷனின் மேல் வரும் தேவ கிரியைகளை மனுஷனில் வெளிப்படுத்தும். (ஆமென்! இதை உங்களால் அறிந்து கொள்ள முடிகிறதா?) ஆபிரகாம் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட குமாரன் வர காத்திருந்தான். அதற்கு முன் அவனுக்கு அடையாளம் காட்டப்பட்டது. அது சாராளின் இருதயத்தின் யோசனைகளை அறிந்து சொன்ன அடையாளமேயாகும். பின்பு சோதோமிற்கு அழிவு உண்டாயிற்று. அதுபோல ஆவிக்குரிய' சபையாகிய இன்றைய மணவாட்டி சபைக்கு அதே அடையாளம் காட்டப்பட்டு இருதயத்தின் யோசனை களை அறியும் ஊழியம்) சோதோமைப் போல் உள்ள மற்ற ஸ்தாபனங்கள் அழிக்கப்பட காத்துக் கொண்டிருக்கிற கடைசி நேரமாயிருக்கின்றதை கவனித்தீர்களா? 93. சிலர் கேட்கிறார்கள், பிரான்ஹாமே, ஆபிரகாமோடு இருந்தது தேவனா-?'' என்று, 94. "ஆம், தேவன் தான்'' என்று வேதம் கூறுகின்றது. இதற்கு ஏதும் வியாக்கியானம் தேவையில்லை. அவர் ஏலோகிம் (ELOHIM) ஆக இருந்தார். வேதம் தெரிந்த எல்லோருக்கும் இதை அறிந்து கொள்ள முடியும். ''ஏலோகிம் (ELOHIM) ''தம்மில் தாமே நிறைந்திருக்கிறவர் ' என்று பொருள்படும். அவரே முந்தினவரும், பிந்தினவரும், தொடக்கமும் முடிவுமாயிருக்கிறார். (எபிரேய மொழியில் *'ஏலோகிம்'' என்றுள்ளது), "ஏலோகிம்' என்று ஆபிரகாம் அவரை அழைத்தான். தோற்றத்தின் போது இருந்த அதே தேவன். ?? ஏலோகிம்''. 95. அவர் "ஏலோகிமாக' இருந்தார். மாமிசத்தில் ஆபிரகாமுக்கு வெளிப்பட்டார். மனித உடைகளை உடுத்தி இருந்தார். மனித ஆகாரத்தை உட்கொண்டார்! ஆமென்! இது ஒரு அடையாளம். கடைசி நாளிலும் தேவன் அவ்விதமே திரும்பவும் மாமிசத்தில் தம்முடைய ஜனங்கள் மத்தியில் காணப்படுவார். ஆமென்!, 'என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளையே அவனும் செய்வான்'' என்றும், ''லோத்தின் நாட்களில் நடந்தது போல மனுஷகுமாரன் வெளிப்படும் நாட்களிலும் அப்படியே நடக்கும்'' என்றும் இயேசு கூறினார். ஆமென்! இதற்கு வியாக்கியானம் தேவையில்லை. வெளிப்படுத்தல் தான் (MANIFESTATION) அவசியமாயிருக்கின்றது. ஆமென்! இதை விசுவாசிக்கின்றீர்களா? நாம் தலைவணங்கி ஜெபிப்போமாக. 96. எங்கள் பரலோகப் பிதாவே, உம்முடைய வாக்குத்தத்தை உம்மண்டையே தருகிறோம். ஏனெனில் நீரே அவைகளை கூறினீர். உம்முடைய வார்த்தையை உம்மாலேயன்றி ஒருவரும் ஜீவித்திருக்கச் செய்ய முடியாது. 'வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று நீர்,.. வெளிச்சம் உண்டானது. இதை யாரும் வியாக்கியானப்படுத்த தேவையில்லை. அது அப்படியே சம்பவித்தது. 97 நாங்கள் அறியப்பட்டபடி, ஒரு கன்னிகை கர்ப்பவதியாவாள்'' என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னான். கன்னிகையான மரியாள் அவ்விதமே கர்ப்பம் தரித்தாள். அதுவே அதன் வியாக்கியானம், 98 யூதேயா தேசத்திலுள்ள பெத்லகேமே, யூதாவின் பிரபுக்களில் நீ சிறியதல்ல; என் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புறப்படுவார்' என்று தீர்க்கதரிசியினால் கூறப்பட்டது. 99 இயேசு கிறிஸ்து என்ன செய்வார் என்றும், சிலுவையில் என்ன கதறிக் கூறுவார் என்றும், அவருடைய கால்களும், கைகளும் எவ்விதம் ஆணிகளினால் கடாவப்படும் என்றும், நீர் முன்னறிவித்தீர். "நம்முடைய மீறுதல்களின் நிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர் மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம்'' என்று தீர்க்கதரிசியின் மூலம் முன்னறிவித்தீர். 100. தாவீதும்கூட என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காண வொட்டீர்" என்று கூறினான். அழிவானது சரீரத்தை தொடும் முன்பு அவருடைய சரீரத்தை உயிரோடு எழுப்புவீர் என்று உம்முடைய வார்த்தை கூறிற்று (யூதர்களோ, இயேசுவின் சரீரத்தை களவாய் கொண்டு போய்விட்டார்கள் என்று கூறுகிறார்கள். அதை இன்றும் விசுவாசிக்கிறார்கள்!) ஆனால் கர்த்தாவே, உம்முடைய வார்த்தையை நாங்கள் விசுவாசிக்கிறோம். அது நிறைவேறிற்று. இயேசு கிறிஸ்து உயிரோடு எழுந்து, "இதோ நான் உலகத்தின் முடிவுபரியந்தம் உங்களோடு இருக்கிறேன்''மத்.28;20) என்று கூறினார். 101. இன்றும் நீர் எங்களோடு இருக்கிறீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். நீர் எப்பொழுதும் இருந்த வண்ணமாகவே இன்றும் இருக்கிறீர். உம்மை வெளிப்படுத்தத்தக்கதாக ஒரு சரிரத்தை நீர் தேடிக் நோக்கிக் கொண்டிருக்கிறீர். இன்றும் கர்த்தாவே, எங்களைப் பரிசுத்தப்படுத்தும், அப்பொழுது நீர் ஜீவிப்பதை நாங்கள் பார்க்கக்கூடும். அன்று அந்த கிரேக்கர், ''இயேசுவைக் காண விரும்புகிறோம்'' என்று கூறினார்கள். அவர்கள் கட்டாயமாக அவரைப் பார்க்க விரும்பினார்கள், ஓ! அவரைப் பார்த்தபொழுதோ எந்தவிதமான புளங்காகிதம் அவர்கள் அடைந்திருக்கக்கூடும்! 102. தேவனே, இன்றும் நீர் மாறாதவராயிருக்கிறீர். உம்மை தேடுகிறவர்கள் கண்டுபிடிப்பார்கள்' என்று வாக்குத்தத்தம் செய்துள்ளீர். ''இன்னும் கொஞ்சக் காலத்திலே உலகம் என்னைக் காணாது (அவிசுவாசிகள்). நீங்களோ என்னைக் காண்பீர்கள். நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள், நான் என் பிதாவிலும் நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்று கூறினீர், நீர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம் . 103. கர்த்தாவே, உரைக்கப்பட்டு எழுதப்பட்ட உம்முடைய வார்த்தையை நீர் மகிமைப்படுத்தும், அப்பொழுது நீர் உம்முடைய வார்த்தைக்கு உண்மை உள்ளவர் என்பது நிரூபணமாகும். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 104 இப்பொழுது நான் ஜெப வரிசையை அழைக்கப் போகின்றேன். ஒன்று முதல் நூறு எண்கள் முடியவுள்ள ஜெப அட்டைகளைக் கொடுக்கப் போவதாக பில்லி கூறினான் என்று நினைக்கிறேன். அவன் இப்பொழுது இங்கில்லை... ஜெப அட்டையின் எண் என்ன?... யாராவது ஒருவர் உங்கள் அட்டையின் பின்புறம் நோக்குங்கள். அதில் ஒரு எண்ணும், A.B,C,L போன்ற அட்சரம் ஒன்றும் எழுதப்பட்டிருக்கும் அது என்ன-! Aவா-? சரி. 105 இப்பொழுது 'A' வரிசையில் ஒன்று, இரண்டு, மூன்று நான்கு, ஐந்து. இங்கு வந்து நில்லுங்கள் . A, நெம்பர் ஒன்று நெம்பர் இரண்டு. நெம்பர் மூன்று, நெம்பர் நான்கு. நான்கு, அந்த எண்ணுடையவர் நிற்பதை நான் காணவில்லையே! ஜெப அட்டை நெம்பர் நான்கு. ஒன்று, இரண்டு, மூன்று... ஒருக்கால் அவர்களால் எழுந்திருக்க முடியாமல் இருக்கலாம். உங்கள் பக்கத்திலுள்ளவர்களின் ஜெப அட்டையைப் பாருங்கள், அவர் அந்த அட்டை வைத்திருந்து, எழுந்து நிற்க முடியாமல் இருக்கலாம். சீக்கிரமாக, அதோ அவர், நான்கு, ஐந்து, ஜெப அட்டை நெம்பர் ஐந்து. ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பன்னிரண்டு. உங்கள் நெம்பரைக் கூப்பிடும் போது, இங்கு வரத் தொடங்குங்கள். நெம்பர் ஒன்று, இரண்டு, - மூன்று, இந்தப் பக்கம் வாருங்கள். ஜெப அட்டை நெம்பர் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, இங்கு வந்து உங்கள் இடங்களில் வரிசையாக நில்லுங்கள். பதினொன்று. பன்னிரண்டு, பதின்மூன்று, பதினான்கு, பதினைந்து, பதினாறு, பதினேழு. பதினெட்டு, பத்தொன்பது, இருபது, இருபத்தொன்று. இருபத்திரண்டு, இருபத்து மூன்று, இருபத்து நான்கு இருபத்தைந்து. யாருக்காகிலும் எழுந்திருக்க முடியவில்லை என்றால்... 106 பின்பாகத்தில் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துருக்கும் ஒரு வாலிபனைக் காண்கிறேன். மகனே, உன் நெம்பர் கூப்பிடப்பட்டால், உன்னால் இங்கு வர முடியாவிட்டால், உன் கையை மாத்திரம் உயர்த்து, அப்பொழுது நாங்கள் உன்னை இங்கு கொண்டு வருவோம். 107 வியாதியாயுள்ள உங்கள் எத்தனை பேர்களுக்கு ஜெப அட்டை இல்லை? எங்கிருந்தாலும் உங்கள் கைகளை உயர்த்துங்கள் பார்க்கலாம். இங்கு ஒருவர் இருக்கிறார், உங்கள் கைகளை உயர்த்துங்கள் நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? அவர்களை அவர்கள் ஒன்று சேர்க்கும் இந்நேரத்தில், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறாரென்று நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? உங்களில் எத்தனை பேர் அதை விசுவாசிக்கின்றீர்கள். இந்தப் போதகங்களை கவனியுங்கள், சகோதரரே, நமது பலவீனங்களைக் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியர் அவர் என்று வேதவாக்கியம் இன்று எடுத்துரைக்கிறது அல்லவா? அது சரியா? அதை எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்? உங்கள் கைகளை உயர்த்துங்கள்? நமது பலவீனங்களைச் குறித்து பரிதபிக்கக் கூடிய பிரதான ஆசாரியரே அவர். 108 அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் கூறுகின்றதை உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்? அப்படியானால் இன்றைக்கு அவர் எப்படி கிரியை செய்வார்? நேற்று எவ்விதம் கிரியை செய்தாரோ அப்படியே இன்றும் அவர் கிரியை செய்ய வேண்டும். அது சரியா-? இன்றிரவு அவர் எங்கிருக்கிறார்-? மகத்துவமானவருடைய வலது பாரிசத்தில் அவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார், அவருடைய சரீரம்; பரிசுத்த ஆவியானவரோ தம்மை வெளிப்படுத்திக் கொள்ள இக்கட்டிடத்தில் இருக்கிறார். 109 கவனியுங்கள், ஓரு நாள் ஒரு ஸ்திரி அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்ட போது என்ன நேர்ந்தது-? அவளிடம் ஜெப அட்டை எதுவுமில்லை, ஆனால் அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டாள். அவள் அவ்விதம் தொட்டபோது, இயேசு திரும்பிப் பார்த்து, என்னைத் தொட்டது யார்-?' என்று கேட்டார். 110 பேதுரு அவரைக் கடிந்து கொண்டான்: ஆண்டவரே அது அவ்வளவு புத்தி உள்ளதாகத் தென்படவில்லையே. ஏன், எல்லாருமே உம்மைத் தொடுவதற்கு முயன்றுகொண்டிருக்கிறார்கள். அப்படியிருக்க "என்னைத் தொட்டது யார்?' என்று கேட்கிறீரே என்றான். 111 அவர், நான் பலவீனமாக ஆனதை அறிந்திருக்கிறேன்'' என்றார். எத்தனை பேருக்கு அது தெரியும்-? என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்'' என்றார் அவர் (லூக்8:46). நான் பலவீனமடைந்தேன். யாரோ ஒருவர் ஒரு வித்தியாசமான தொடுதலினால் தொட்டார்''. அவர் திரும்பி ஜனங்களைப் பார்த்து, அந்த விசுவாசத்தின் வாய்க்காலைக் கண்டு பிடித்தார். 112 அங்கிருந்த எல்லோருமே அவர்கள் கைகளை அவர் தோளின் மீது போட்டு, "ஓ, ரபீ, நாங்கள் உம்மை விசுவாசிக்கிறோம்” என்றெல்லாம் கூறினர். 113 ஆனால் அங்கிருந்த ஒருத்தி உண்மையாக விசுவாசித்தாள். அவள் அவருடைய வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு, அவள் சுகமடைந்துவிட்டதாக விசுவாசித்தாள். ஏனெனில் அவ்விதம் செய்ய முடிந்தால், அவள் சுகமடைவாள் என்று தன் இருதயத்தில் எண்ணினாள். 114. அவர் திரும்பி அவளைக் கண்டு பிடிக்கும் வரைக்கும், ஜனங்களைப் பார்த்துக் கொண்டேயிருந்தார். அவர், அவளுடைய பெரும்பாடு நின்று போனது என்றும் அவள் சுகமாகி விட்டாளென்றும் அறிவித்தார். அது சரியா-? அந்த ஜனங்களிடம் அம்முறையில் தான் அவர் நடந்து கொண்டார். 115 அவர் மரித்து விடவில்லையென்று நான் உறுதி கூறுகிறேன். அவர் எப்பொழுதும் போல இன்றைக்கும் ஜீவனுள்ளவராயிருக்கிறார். இயேசுவே, "சோதோமின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரன் வருகையிலும் நடக்கும்'' என்று கூறினதாக வேதம் உரைக்கின்றது. 116 கவனியுங்கள், தேவன் எத்தகைய வரங்களைக் கொண்டிருந்தாலும், அதற்கு பதிலளிக்க (RESPOND) ஏதாவதொன்று ஜனங்களிடையேயும் அவசியமாயுள்ளது. அவர் ஒரு பட்டினத்திற்குச் சென்றதாகவும், அங்கிருந்த ஜனங்களுடைய அவிசுவாசத்தினிமித்தம் அவரால் அனேக காரியங்களைச் செய்ய முடியவில்லையென்றும் வேதம் கூறுகின்றது. அது சரியா? இன்றைக்கும் அது போன்றே உள்ளது. நீங்கள் அவர் - பேரில் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் அவரை விசுவாசிப்பது அவசியம். அந்த ஒரு வழி மாத்திரமேயுள்ளது. 117 ஜெப வரிசை ஆயத்தமாயுள்ளதா-? அடுத்த பத்து நிமிடங்களுக்கு எல்லோரும் பயபக்தியாயிருங்கள். என்னால் அங்கு வர இயலுமோ என்று எனக்குத் தெரியவில்லை. சுமார் இருபத்தைந்து அல்லது முப்பது பேர் அங்கு நின்று கொண்டிருக்கின்றனர். இந்த ஜெப வரிசையில் நின்று கொண்டிருக்கும் உங்கள் ஒவ்வொருக்கும் நான் அறிமுகமில்லாதவன். உங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. அது உண்மையானால், கையுயர்த்துங்கள். ஜெப வரிசையில் நின்று கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும். 118 இங்குள்ள மற்றவர்கள்; உங்களைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று அறிந்திருக்கிறவர்கள், உங்கள் கைகளையுயர்த்துங்கள் . பாருங்கள்-? நண்பனே, இதை தான் நான் கூற முயல்கிறேன். மேடையின் மேலுள்ள அத்தனை போதகர் களும்... கிறிஸ்து இந்த வாக்குத்தத்தத்தை செய்திருக்கிறார், அது எழுதி வைக்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது நிறைவேறும்-? கடைசி நாட்களில், கர்த்தருடைய வருகைக்கு சற்று முன்பு, அது சரியா-? அப்பொழுது அது நிறைவேறும். 119 இன்றைக்காக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ள வார்த்தையாகும் அது; லூத்தரின் வெளிச்சமல்ல; வெஸ்லியின் வெளிச்சமல்ல; பெந்தேகோஸ்தே-யினரின் வெளிச்சமும் கூட அது இல்லை. அது ரஸ்தாவின் மேலே சென்று கொண்டேயிருக்கிறது. லூத்தர் சரி தான், மெதோடிஸ்டுகள் சரிதான், பாப்டிஸ் டுகள் சரிதான், பெந்தோகோஸ்தேயினர், அருமையானவர்கள். அவர்களைச் சேர்ந்தவர் இன்றிரவு இங்குள்ளனர். அது தனிப்பட்ட நபரல்ல. 120 நீங்கள் ஒரு மெதோடிஸ்டிடம் லூத்தரைப் பற்றி ஒன்றும் கூற முடியாது. ஏனெனில் அவன் பரிசுத்தமாக்கப்படுதலில் நம்பிக்கை கொண்டிருக்கிறான். லூத்தரன் ஸ்தாபனத்தார் அதை விசுவாசிப்பதில்லை. பாருங்கள்? 121 பெந்தேகோஸ்தேயினரிடம் நீங்கள் பரிசுத்தமாக்கப்படுதல் போன்றவை களைக் குறித்து கூற முடியாது. ஏனெனில் அவர்கள் வரங்கள் புதுப்பிக்கப் படுதலைக் கண்டுள்ளனர். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். இல்லை, அதைக் காட்டிலும் அதிகமானதை அவர்கள் பெற்றிருக்கிறார்கள். பாருங்கள் அது தான் நமக்கிருந்த கடைசி சபையின் காலம். இனி வேறு சபை காலங்கள் இருக்காது என்று வேதம் கூறுகின்றது. 122 ஆனால் ஜனங்களின் சேர்க்கை நிகழும். பாருங்கள். அதற்கு தான் நாம் வந்திருக்கிறோம். கடைசி அடையாளம் என்னவென்பதை நினைவு கூருங்கள், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டிருக்கும் குமாரனை எதிர் நோக்கியிருக்கும் ஜனங்கள் நாம்-? உங்கள் கைகளை உயர்த்துங்கள். கிறிஸ்துவுக்குள் இருப்பதனால் நீங்கள் ஆபிரகாமின் சந்ததியார் என்பதை விசுவாசிக்கின்றீர்களா? உங்கள் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் ஆபிரகாமின் சந்ததியராய் இருப்பீர்களானால், உங்கள் அடையாளத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்-! அது பாபிலோனில் இல்லை. ஸ்தாபனங்களில் இல்லை. அது உங்கள் மத்தியில் அந்த குழப்பத்தில் இல்லாதவரின் மத்தியில் இருக்கின்றது அதை விசுவாசியுங்கள். 123 இங்கு ஒரு ஸ்திரீ இருக்கிறாள். அவள் எனக்கு முற்றிலும் அறிமுகம் இல்லாதவள். ஏறக்குறைய என் வயது. என் ஜீவியத்தில் அவளை நான் கண்டதேயில்லை. அவளுடைய வியாதியை என்னால் சுகப்படுத்த முடியுமானால், நான் சுகப்படுத்துவேன். அவளுக்கு வியாதி இருக்குமானால் அவளைக் குறித்து எனக்கு ஒன்றுமே தெரியாது. சில நிமிடங்களுக்கு முன்பு அவள் கையை உயர்த்தினதை நீங்கள் கண்டீர்களா-? அவளை நான் கண்டதே இல்லை. அவள் அங்கு நின்று கொண்டிருக்கும் ஒரு ஸ்தீரீ. 124 இன்றைக்கு அவர்கள் ஜெப அட்டைகளைக் கொண்டு வந்து, அவைகளைக் கலந்து, ஜனங்களுக்குக் கொடுத்தார்கள், இங்குள்ள ஒருத்தருக்கு நெம்பர் ஒன்றும், பின்னால் உள்ளவர்களுக்கு நெம்பர் பத்து. நெம்பர் பதினைந்து, நெம்பர் ஏழு: இப்படியாக அவை கலந்துள்ளன. ஒவ்வொரு நாளும், உங்கள் முன்னிலை-யில், அவை இவ்விதம் கலந்தே கொடுக்கப்படுகின்றன. அவர்களை நாங்கள் கூப்பிடும் போது, அவர்களை எல்லாவிடங்களிலுமிருந்தும் கூப்பிடுகிறோம். உங்களுக்கு ஜெப அட்டை அவசியம் கூட இல்லை. அங்கு உட்கார்ந்து கொண்டு விசுவாசித்தால் மாத்திரம் போதும். - 125 உங்களைத் தட்டியெழுப்பி, நீங்கள் வாழும் மணி நேரத்தை அறிந்து கொள்ளுங்கள். பாருங்கள்-? நண்பனே, அது ஏறத்தாழ முடிந்து விட்டது. முடியும் தருணத்தில் உள்ளது, 126 ஆபிரகாமின் தேவன் இயேசுகிறிஸ்துவை மரித்தோர்லிருந்து உயிரோடு எழுப்பியிருந்தால், ஆபிரகாமின் காலத்திலிருந்த அதே அடையாளம் கடைசி நாட்களில் காணப்படும் என்று இயேசு வாக்களித்திருக்கின்றார். அந்த தூதன் (மாமிசத்தில் தோன்றிய தேவன்), வாக்குத்தத்தம் பண்ணட்பட்ட குமாரன் வருவதற்கு சற்று முன்பு, ஆபிரகாமின் முன்னிலையில் இந்த அடையாளத்தைக் காண்பித்தார். இன்றைக்கு அதுவே சம்பவிக்கும் என்று இயேசு கூறினார். 127. நாம் அணுகுண்டுகளையும் ஸ்தாபனங்களையும் அவர்களிலுள்ள குழப்பங்களையும் காண்கிறோம். பில்லிகிரகாமும் ஓரல் ராபர்ட்ஸும் - ஒருவர் பெந்தேகோஸ்தேயினரின் தூதுவன் மற்றவர் ஸ்தாபனங்களின் தூதுவன், தூதுவன், அங்கிருப்பதையும், அவர்கள் அந்த அடையாளத்தை நிறைவேற்று வதையும் நாம் காண்கிறோம். பில்லிகிரகாம் முற்றிலும் வேதபண்டிதர். வேத தத்துவத்தில் தான் ஸ்தாபனங்கள் நம்பிக்கை கொண்டுள்ளன. ஓரல் ராபர்ட்ஸ் தெய்வீக சுகமளிப்பவர் - அது தான் பெந்தேகோஸ்தேயினர் விரும்புவது. 128. இங்கு பாருங்கள், ஆபிரகாமின் சந்ததிக்கு வேறொன்று வாக்குத்தத்தம் செய்யப்பட்டுள்ளது. அவர்களிருவரும் ஸ்தாபனங்களின் மத்தியில் இருக்கின் றனர். ஆனால் ஸ்தாபனங்களுக்குப் புறம்பாக ஒன்று நடக்கவேண்டும். அது தான் ஜனங்கள் ஒன்றாக சேர்க்கப்படுவது. அதை நாளை இரவு வரை நிறுத்திக் கொள்வோம். 129. கவனியுங்கள், இந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. அவளிடம் என் முதுகைத் திருப்பிக் கொள்கிறேன். தேவனாகிய கர்த்தர் அவளிடம் ஏதாகிலும் கூறினால்; அது குடும்ப சம்பந்தமானதோ, அல்லது பண சம்பந்தமாகவோ இருக்கலாம். அல்லது அது வியாதியாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. அது உண்மையா இல்லையா என்பதை அவள் அறிந்து கொள்வாள். 130 அன்று செய்ததையே இன்றும் அவர் செய்வாரானால், இயேசு கிறிஸ்து கடைசி நாளுக்கென வாக்களித்த தேவன் இங்கிருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறீர்களா-? சோதோமில் இருந்த நிலையில் நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டு வருகிறோம் என்பதை உங்களில் எத்தனை பேர் விசுவாசிக்கின்றீர்கள்? முழு உலகமே: சோதோமின் நிலையை அடைந்து விட்டது-! இன்றிரவு நான் உங்களிடம் கூறியது சத்தியமென்று உங்களில் எத்தனை பேர் நம்புகின்றீர்கள்? ஆபிரகாம் சந்ததியிலுள்ள பிள்ளைகள் தேவனை விசுவாசிப்பார்கள்.' 131 அப்படியானால், நான் அந்த ஸ்தீரீயின் முகத்தை நோக்கி மனோதத்துவ வசியத்தின் (TELEPATHY) மூலம் நான் அவளைக் குறித்து அறிந்து கொண்டேன் என்னும் எண்ணத்தை உங்கள் மனதிலிருந்து அகற்றி விடுங்கள். மனோதத்துவ வசியத்தைப் பற்றி அறிந்திருப்பவர்களுக்கு இது அதனால் இல்லையென்னும் மேலான அறிவு உண்டாயிருக்கும். பாருங்கள்-? பாருங்கள்-? மதேனாத்துவ வசிய நிபுணர் பிரசங்கம் செய்வதை நீங்கள் இதுவரை கண்டதுண்டா-? மற்றவர்களின் ஆவிகளுடன் தொடர்பு கொண்டுள்ளவர் (SPIRITUALIST) யாராகிலும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்து, இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரென்று அறிக்கை செய்ததை நீங்கள் இது வரை கண்டதுண்டா-? இல்லை. 132. பாருங்கள், அது ஜனங்களின் மனதில் எழும் கருத்துக்கள். பாருங்கள், அவர்கள் குருடராயிருக்கின்றனர். அவர்கள் குருடராயிருக்க முடியும் என்பதை நீங்கள் நம்புகின்றீர்களா-? அவர்கள் அப்படியிருப்பார்கள் என்று வேதம் கூறுகின்றது. அது சரியா-? ''துணிகரமுள்ளவர்கள், இறுமாப்புள்ளவர்கள், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியர், இணங்காதவர்கள், அவதூறு செய்கிறவர்கள், இச்சையடக்கமில்லாதவர்கள், நல்லோரைப் பகைக்கிற வர்கள், தேவ பக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்.'' 133. இந்த இரு ஆவிகளும் மிக அருகாமையில் இருந்து, கடைசி நாட்களில் கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று மத்தேயு 24:24-ல் இயேசு கூறவில்லையா-? ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் வஞ்சிக்கப்படுவது என்பது கூடாத காரியம், தொடக்கத்திலேயே அவர்கள் தேவனுடைய சிந்தையில் இருந்தனர். அவர்கள் தேவனின் பாகமாய் இருக்கின்றனர். 134. ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாய் இருக்கிறவரே, நான் உம்மைக் குறித்து உண்மையை உரைக்கிறேன் என்பதை இங்குள்ளவர்கள் இன்றிரவு அறிந்து கொள்ளட்டும். அது நீர், ஆண்டவரே, உமது ஊழியக்காரர்கள் தங்கள் சொந்த சிந்தனைகளை புறம்பே தள்ளி விட அருள் புரியும். அப்பொழுது எங்கள் சரீரங்களை உமது நாமத்தின் மகிமைக்காக நீர் உபயோகிக்க முடியும். தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில். ஆமென். 135. வரம் என்பது என்ன-? ஒன்றிலிருந்து வெட்டி எடுத்து உண்டாக்குவதல்ல. இல்லை, இல்லை. தேவன் உங்களை உபயோகிப்பதற்கென உங்கள் சிந்தனைகளை வழியிலிருந்து அகற்றிக் கொள்ள நீங்கள் அறிந்து கொள்வதே அது. உங்களை நீங்கள் வழியிலிருந்து எடுத்துவிட்டால், தேவன் உங்களை உபயோகிப்பார். அது தான் வரம். 136. எனக்குப் பின்னாலுள்ள இந்த ஸ்திரீ சுகம் பெறாவிட்டால், இப்பொழுதே மரித்துப்போவாள். அவளுக்கு வேறொரு மனிதன் சமீபத்தில் ஜெபம் செய்தார். அவளுக்கு புற்று நோய் உள்ளது. அது அவளுடைய மார்பகத்தையும் சுவாச கோசத்தையும் பாதித்துள்ளது. சமீபத்தில் அவளுக்காக ஜெபம் ஏறெடுக்கப் பட்டது. அவள் சுகமடைந்து விட்டாள் என்று விசுவாசத்தில் ஏற்றுக் கொள்ள அவள் முயன்று கொண்டிருக்கிறாள். அது கர்த்தர் உரைக்கிறதாவது''. ஸ்திரீயே, அது உண்மையா-? ("அது உண்மை '' என்று அந்த ஸ்திரீ பதிலளிக்கிறாள் - ஆசி), அப்படியானால் உன் கையை இங்கு குழுமியுள்ளவர்களுக்கு முன்பாக ஆட்டு. ஆபிரகாமின் தேவன் இப்பொழுதும் ஜீவிக்கிறார். சரி, நீ விசுவாசித்துக் கொண்டிருப்பதையே விசுவாசி, நீ சுகம் பெறுவாய். ஆமென். 137. இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த ஸ்திரீ, இரண்டாவது வரிசையின் கடைசியில், இரண்டாவது ஸ்திரீ. நான் திரும்பின போது, அவளுடைய கரத்தை சுற்றி ஏதோ ஒன்றைக் கண்டேன். இரத்த அழுத்தம் அங்குள்ளது. அவளுக்கு உயர்ந்த இரத்த அழுத்தம் (HIGH BLOOD PRESSURE) இருக்கின்றது. ஸ்திரியே, அது சரியா-? உன் கையை உயர்த்து. நீ விசுவாசித்தால், உன் இரத்த அழுத்தம் குறைந்து விடும். ஆபிரகாமின் தேவன் இப்பொழுதும் காடசியில இருக்கிறார். அவர் எப்பொழுதும் இருந்தது போல் இன்றைக்கும், இன்றைக்குரிய தேவனுடைய வார்த்தையாக இருக்கிறார். 138. உனக்கு இப்பொழுது எப்படி இருக்கின்றது-? நீ இப்பொழுது விசுவாசிக் கின்றாயா-? தேவனிடத்தில் விசுவாசமாயிரு. நீ ஒரு குழந்தையைப் போன்ற சுபாவமுடையவள். வாலிபப் பெண்ணே, உன் இருதயத்தை கர்த்தர் அறிந்திருக்கிறார். எனக்குத் தெரியாது. உனனிலுள்ள கோளாறு என்ன என்பதை தேவன் எனக்கு வெளிப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கின்றாயா-? அதை நான் எடுத்துக் கூறினால், நீ அவரை விசுவாசிப்பாயா-? அது உனக்காக அல்ல, வேறு யாரோ ஒருவருக்காக, உன் சகோதரனுக்காக. அவன் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறான். அவன் வடக்கிலுள்ள டூலேர் என்னும் பட்டினத்தில் வாழ்கிறான். அவன் - ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருக்கிறான் அவனுக்கு இரத்தப் புற்று நோய் உள்ளது. வைத்தியர்கள் கைவிட்டனர். அவன் மரிக்கும் தருவாயில் இருக்கிறான். நம்பிக்கை எதுவுமே இல்லை. அது உண்மை. நீ விசுவாசிக்கிறயா-? (அந்தப் பெண் அழுது கொண்டே "ஆம்' என்று பதில் அளிக்கிறாள்- ஆசி). சரி. உன் கையில் என்ன இருக்கிறது? அதைக் கொண்டு போய் அவன் மேலே வை, சந்தேகப்படாதே, விசுவாசி! ஆமென். 139 நீ விசுவாசிக்கின்றாயா? இந்த ஸ்திரீயை என் ஜீவியத்தில் நான் கண்டதே இல்லை. ஆனால் தேவன் எப்பொழுதும் தேவனாகவே இருக்கிறார் ஒரு மனிதனால் இதைச் செய்யமுடியுமா என்பதை என்னிடம் கூறுங்கள். மனிதன் அவ்விதம் செய்யவே முடியாது. கடைசி நாட்களில் நாட்களில் செய்தது போல இங்கு வந்து தம்மை ஆபிரகாமின் சந்ததிக்கு முன்பு உறுதிப்படுத்துவார் என்று இயேசுகிறிஸ்துவினால் வாக்களிக்கப்பட்ட அந்த தேவன் தான் இது. 140, இந்த ஸ்திரீயை எனக்குத் தெரியாது. நாங்கள் ஒருவருக்கொருவர் அந்நியர், இது தான் நாங்கள் வாழ்க்கையின் முதன் முதலாக ஒருவரையொருவர் சந்திப்பது என்று நினைக்கிறேன். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீ விசுவாசிக்கிறாயா-? இது வார்த்தை என்பதை நீ விசுவாசிக்கிறாயா? அப்படியானால் வார்த்தை இன்றைக்கும் இருதயத்தின் சிந்தனைகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயிருக்கிறது. அது சரியா-? நீ விசுவாசித்தால், வார்த்தை சுகமளிப்பவரும் கூட. நீ விசுவாசிக்கிறாயா-? நீ கறுத்த நிழலினால் நிழலிடப்பட்டிருக்கிறாய். அது புற்று நோய். அந்த புற்று நோய் எங்குள்ளது என்று தேவன் என்னிடம் கூறமுடியுமென்று நீ விசுவாசிக்கிறாயா-? அது சிறு குடலில் உள்ளதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். நீ இப்பொழுதே சுகம் பெறுவாய் என்று விசுவாசிக்கிறாயா-? செல், சந்தேகம் எதுவும் படாதே. தேவன் உன்னை சுகப்படுத்துவார். ஆமென். 141. நீங்கள் ஒவ்வொருவரும் விசுவாசிக்கிறீர்களா-? அவர் என்ன செய்வாரென்று வாக்களித்துள்ளதை-! தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள். சந்தேகப்படா தீர்கள். 142. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். உன்னை எனக்குத் தெரியாது. நாம் அந்நியராயிருந்தால், இங்குள்ளவர்கள் அதை அறிந்து கொள்ளட்டும். நாம் கரங்களைப் பிடித்துக் கொள்வோம். இந்த ஸ்திரீயை என் ஜீவியத்தில் நான் கண்ட தேயில்லை, 143. அங்கிருப்பவர்களே, அதை விசுவாசிக்கின்றீர்களா-? இது இயேசு கிறிஸ்து என்று விசுவாசிக்கின்றீர்களா-? அது என்ன-? அது அவருடைய வார்த்தை. இந்த ஜனங்கள் அதைப் புறக்கணிக்கும் போது. அவர்கள் ஒரு மனிதனைப் புறக்கணிப்பதில்லை, அவர்கள் வார்த்தையைப் புறக்கணிக்கின்றனர். வெளிப் புறமாயுள்ள வார்த்தை உட்புறம் செல்ல முடியவில்லை. 144. இந்த ஸ்திரீ எனக்கு அறிமுகமில்லாதவள். என் ஜீவியத்தில் அவளை நான் கண்டதேயில்லை. தேவனே சுகமளிப்பவர். அவள் சுகத்திற்காக ஒருக்கால் இங்கு வந்திருக்க மாட்டாள்; வேறெதற்காகவும் வந்திருக்கலாம். உனக்குள்ள கோளாறு என்னவென்பதை தேவன் எனக்கு விளக்கிக் காண்பிக்கக் கூடுமானால், என்னை நீ விசுவாசிப்பாயா-? உன் காது கோளாறுக்காக, முதலாவது உனக்கு ஜெபம் அவசியமாயுள்ளது. உன் காதுகளில் ஒன்று கேட்கவில்லை. அது உண்மை. உனக்குப் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளது. அந்த பழக்கத்தை தவிர்க்க வேண்டுமென்று நீ விரும்புகிறாய், உன் விரலை உன் கேட்கும் காதுக்குள் போடு, சரி. கேட்கும் காதுக்குள். தேவனை விசுவாசித்து உன் பாதையில் செல். நீ விசுவாசித்தால் இனி மேல் புகை பிடிக்கவே மாட்டாய், போ, கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பாராக. நடந்தது என்னவென்று பார்த்தீர்களா? அவர் உண்மை உள்ளவரல்லவா? 145. உன்னை எனக்குத் தெரியாது. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர். என் ஜீவியத்தில் உன்னை நான் கண்டதேயில்லை. ஆனால் தேவன் உன்னை அறிவார். உன்னைக் குறித்து தேவன் என்னிடம் கூறினால், நீ விசுவாசிப்பாயா-? 146. இங்கு கூடியுள்ளவர் அனைவருமே விசுவாசிப்பீர்களா-? இங்குள்ளவர்களில் யாருக்காவது அந்த ஸ்திரீயைத் தெரியுமா-? சரி, நான் கூறுவது உண்மையா இல்லையாவென்று உனக்குத் தெரியும். அது அதை முடிவுபடுத்த வேண்டும். அது உனக்கு உண்மையை உரைக்கவேண்டும். 147. கடந்த சில நிமிடங்களில் என்ன நிகழ்ந்ததென்று நீங்கள் பார்த்தீர்கள். நான் தடுமாறுகிறேன். எல்லாமே என் கண்களுக்கு மறைந்து போகின்றன, பாருங்கள், அது தான் பகுத்தறிதல். அது பரிசுத்த ஆவியானவர், நான் அல்ல. இந்த நாளுக்கென வாக்களிக்கப்பட்டுள்ள வார்த்தை அது. அப்போஸ்தலர்களின் காலத்திலிருந்து அது இருந்ததேயில்லை, அது எப்பொழுதுமே இருந்ததில்லை. ஆனால் 'மனுஷகுமாரனுடைய வருகைக்கு சற்று முன்னதாக, லோத்தின் நாட்களில் நடந்தது போல, மனுஷகுமாரனுடைய வருகையிலும் இருக்கும்'' அவிசுவாசிகள் அதை விசுவாசிப்பதில்லை. அவர்கள் விசுவாசிப் பார்களென்று எதிர்பார்க்கப்படுவதுமில்லை. ஆனால் விசுவாசிகளோ அதை விசுவாசிப்பார்கள், 148. பரிசுத்த ஆவியானவர் இதை வெளிப்படுத்தித் தருவாரானால், எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிப்பீர்கள்-? உங்கள் கைகளை உயர்த்துங்கள். 149. உனக்கு எங்கோ காயம் ஏற்பட்டுள்ளது. ஒரு கார் விபத்து உண்டாகி, உன் முதுகெலும்பு கழுத்தில் தளர்ந்த நிலையில் உள்ளது. உனது நீரகமும் கூட தளர்ந்து காணப்படுகின்றது. அது உண்மை அல்லவா-? நீ விசுவாசிக்கின்றாயா-? நீ சுகம் பெறுவாய். கர்த்தருக்கு ஸ்தோத்திரம். 150. நீரகக் கோளாறுகளை தேவன் சுகமாக்குவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? அப்படியானால் நீ சென்று சுகத்தை ஏற்றுக் கொள். 151. வா, ஸ்திரியே. இந்தப் பக்கம் பார்-? தேவன், இருதயக் கோளாறை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? சரி, விசுவாசித்து உன் பாதையில் செல். உன் இருதயம் சரியாகி விடும். தேவனை விசுவாசி. அது மாத்திரமே நீ செய்ய வேண்டியது. 152. இங்கு வா. உன் முதுகைக் கர்த்தர் சுகமாக்க முடியும் என்று விசுவாசிக்கிறாயா-? நீ சென்று அதை விசுவாசி. 153. வா, ஸ்திரீயே. வயிற்றுக் கோளாறை கர்த்தர் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? இங்கிருந்து சென்று, உன் இரவு ஆகாரத்தை புசி. உன் முழு இருதயத்தோடும் விசுவாசி. 154. வா, கீல்வாதத்தைக் கர்த்தர் குணமாக்கமுடியும் என்று விசுவாசிக்கிறாயா-? இங்கிருந்து சென்று தேவனை விசுவாசி... தேவன் உன்னை சுகமாக்குவார். 155, சரி, வா. உன் முழு இருதயத்தோடும் நீ விசுவாசிக்கிறாயா-? நீ விசுவாசிக்கிறாயா-? மறுபடியும், கீல்வாதம். தேவன் உன்னை சுகமாக்க முடியுமென்று நீ விசுவாசிக்கிறாயா-? இங்கிருந்து சென்று, விசுவாசித்து. நன்றி, தேவனே' என்று கூறு, அங்கு எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள்-? நீ விசுவாசிக்கிறாயா-? 156. சிவப்பு ஆடை அணிந்து இங்கு உட்கார்ந்து கொண் ருக்கும் இந்த ஸ்திரீ, இப்பொழுது கையை உயர்த்திக் கொண்டிருக்கும் ஸ்திரீ, உயர்ந்த இரத்த அழுத்தத்தினால் அவதியுறுகிறாள், உன்னைத் தேவன் சுகமாக்க முடியுமென்று நீ விசுவாசிக்கிறாயா-? சரி. உன் கைகளை அடுத்துள்ள ஸ்திரீயின் மீது வைத்து, அவளுடைய குரல் சரியாகிவிடும் என்று கூறு . ஆமென். அதோ அது. ஆமென். நீ விசுவாசிக்கிறாயா-?விசுவாசமாயிரு 157. இங்கு உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதனுக்கு இரத்த ரோகம்(HEMORRHAGE) உள்ளது. ஐயா, நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? ஆம், உமக்கு இரத்த ரோகம் உள்ளது. அது குணமாகும் " என்று விசுவாசிக்கிறீர்களா? 158. உங்களுக்கு அடுத்துள்ள ஸ்திரிக்கும் இரத்த ரோகம் உள்ளது அவருடன் முதுகு கோளாறும். தேவன் உன்னைச் சுகப்படுத்தப் போகின்றார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? உன் கையை உயர்த்தி அதை ஏற்றுக் கொள், விசுவாசி. 159, உனக்கு அடுத்துள்ள ஸ்திரீக்கு காலிலும் இடுப்பிலும் கோளாறு உள்ளது. அது உண்மை. நீ சுசுமடைவாய் என்று விசுவாசிக்கிறாயா-? சரி, உன் கையை உயர்த்தி.. ' நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறு. 160. சரி, அதற்கும் அடுத்துள்ள ஸ்திரிக்கு தொற்றுநோய் உள்ளது. கண்ணாடி அணிந்திருக்கும் ஸ்திரீயே, கர்த்தர் அதை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக் கிறாயா-? உன் கையை உயர்த்தி, "நான் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறு. 161. அவளுக்கும் அடுத்துள்ள பெண்ணுக்கு நீரகக் கோளாறு உள்ளது. ஸ்திரியே, கர்த்தர் நீரகக் கோளாறை சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? சரி, உன் கையை உயர்த்தி அதை ஏற்றுக்கொள். 162 அவளுக்கு. அடுத்துள்ள சிறுமிக்கு களகண்டமாலை (SPITER) உள்ளது. அதை கர்த்தர் சுகப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறாயா-? உன் கையை உயர்த்தி அதை ஏற்றுக் கொள். 163 எத்தனை பேர் உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கின்றீர்கள்-? அப்படியானால் எழுந்து நின்று அதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறவரின் சமுகத்தில் எழுந்து நில்லுங்கள். . 164 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே 'பரிசுத்தாவியானவர் இந்தக் கட்டிடத்தில் விழுந்து, அவருடைய திவ்விய பிரசன்னத்தினால் ஒவ்வொருவரையும் சுகமாக்குவாராக.